fbpx

இசைஞானி இளையராஜா வரும் 8-ம் தேதி லண்டனில் தனது முதல் சிம்பொனியை அரங்கேற்ற இருக்கும் நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இளையராஜாவின் வீட்டுக்குச் சென்று வாழ்த்து தெரிவித்தார்.

இதுகுறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள பதிவில், “இசைஞானி இளையராஜாவுடன் இன்றைய காலைப் பொழுது.. ஆசியாவிலேயே யாரும் செய்யாத சாதனையாக, வரும் மார்ச் 8 அன்று இலண்டன் மாநகரில் சிம்பொனி …

இசைஞானி இளையராஜாவுடன் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேல் வயலினிஸ்டாக இருந்த ராமசுப்பு என்ற ராமசுப்ரமணியன் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 91.

தமிழ் சினிமாவில் தனக்கான தனி முத்திரை பதித்த வயலினிஸ்ட் ராமசுப்பு (91) காலமானார். இசைஞானி இளையராஜாவுடன் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேல் வயலினிஸ்டாக இருந்த அவர், பல்வேறு விருதுகளை வாங்கியவர். 9 வயதில் …

மொரிஷியஸில் தான் தனியாக இருக்கும் புகைப்படத்தை இசையமைப்பாளர் இளையராஜா பகிர்ந்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் அவரது 171ஆவது படமான ‘கூலி’ படத்தின் டீசர் வெளியானது. ‘கூலி’ படத்தின் டைட்டில் டீசரில் தன்னுடைய பாடலை தனது அனுமதி பெறாமல் பயன்படுத்தியுள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு எதிராக இளையராஜா நோட்டீஸ் அனுப்பினார். …

மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம் வீரப்பன் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த், இளையராஜா நேரில் அஞ்சலி செலுத்தினர்.

எம்ஜிஆர், அதிமுக தொடங்கிய போது அவரது வலதுகரமாக அக்கட்சியில் இருந்த ஆர்.எம்.வீரப்பன் கடந்த பல ஆண்டுகளாக முதுமையால் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார். 98 வயதான ஆர்.எம்.வீரப்பனுக்கு இன்று காலை திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில், சிகிச்சைக்காக …

இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் மகளும் கார்த்திக் ராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் சகோதரியுமான பவதாரணி இளையராஜா கல்லீரல் புற்றுநோய் காரணமாக மரணம் அடைந்திருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. அவரது உடல் நாளை சென்னை கொண்டுவரப்படும் என செய்திகள் தெரிவிக்கின்றன.

1984 ஆம் வருடம் வெளியான மைடியர் குட்டிச்சாத்தான் என்ற திரைப்படத்தில் பின்னணி பாடகியாக அறிமுகமானவர் …

பண்ணைபுரத்தைச் சேர்ந்த இளையராஜா அன்னக்கிளி படம் துவங்கி சமீபத்தில் வெளியான மாடர்ன் லவ் வரை இசையால் ரசிகர்களை மகிழ்வித்துவருகிறார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் கிட்டத்தட்ட 1400க்கும் அதிகமான படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.

தற்போது இவரது இசையில் நினைவெல்லாம் நீயடா, ஆர்யூ ஓகே பேபி, விடுதலை 2, கிஃப்ட் உள்ளிட்ட படங்கள் …

திரையுலகில் இசைஞானி என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் இளையராஜா. இசையில் இவர் மேதை என்றால், தொடர்ந்து இவரை பற்றி பல சர்ச்சைக்குரிய விஷயங்கள் வெளிவந்துகொண்டு இருக்கிறது. அந்த வரிசையில் பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இளையராஜா செய்த மோசமான விஷயம் குறித்து பேசியுள்ளார்.

மேடையில் பிரபல பாடகி ஸ்ரேயா கோஷல் பாடல் ஒன்றை பாடிக்கொண்டு இருந்தார். …