fbpx

குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் இந்திய ராணுவத்தினருடன் பிரதமர் நரேந்திர மோடி தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்.

நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகையானது கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் குஜராத் மாநிலம் கட்ச் கழிமுகப் பகுதியில் உள்ள லக்கி நாலாவில் எல்லைப் பாதுகாப்புப் படை, ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையைச் சேர்ந்த துணிச்சல் மிக்க வீரர்களுடன் …

Soldiers Clash: லடாக் எல்லைப் பகுதியில் இந்திய-சீன ராணுவ வீரர்கள் மோதலில் ஈடுபட்டதாக வெளியான செய்திகளுக்கு இந்திய ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது.

லடாக்கின் துர்புக் செக்டரில் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு (எல்ஏசி) அருகே உள்ள பர்ட்சே பகுதியில் திங்கள்கிழமை காலை 4 மணி அளவில் இந்திய மற்றும் சீன துருப்புக்களுக்கு இடையே மோதல்கள் நடந்ததாக கூறப்பட்டது . …

ஆகஸ்ட் 1 முதல் 5-ம் தேதி வரை கோயம்புத்தூரில் ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகத்தின் அக்னிவீர் ராணுவ ஆட்சேர்ப்பு பேரணி நடைபெற உள்ளது.

கோயம்புத்தூர் ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகம், கோயம்புத்தூர் (தமிழ்நாடு) நேரு ஸ்டேடியத்தில் 01 ஆகஸ்ட் 2024 முதல் 05 ஆகஸ்ட் 2024 வரை அக்னிவீர் ஜெனரல் டியூட்டி, அக்னிவீர் டெக்னிக்கல், அக்னிவீர் அலுவலக உதவியாளர் …

Neera Arya: இந்திய தேசிய ராணுவத்தின் முதல் பெண் உளவாளி என்று மிகவும் பிரபலமாக அறியப்பட்ட நீரா ஆர்யா, இந்திய ராணுவத்தின் “ஜான்சி ராணி ரெஜிமென்ட்டில்” வீராங்கனையாக இருந்தார். நீரா ஆர்யாவின் வீர வாழ்க்கை மற்றும் இந்திய வரலாற்றின் பக்கங்களில் அவர் எப்படி இடம் பிடித்தார் என்பது பற்றி தெரிந்துகொள்வோம்.

ஆங்கிலத்தில் ஓர் சொல்லாடல் இருக்கிறது …

Agniveer Scheme: இளம் ராணுவ வீரர்களை குறுகிய கால சேவைக்கு நியமிக்கும் திட்டமான அக்னிவீர் திட்டத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை இந்திய ராணுவம் முன்மொழிந்துள்ளது.

பாதுகாப்பு ஆதாரங்களின்படி, இந்தத் திட்டங்களின் செயல்திறனை அதிகரிக்கவும், அக்னிவீரர்களின் நலன் குறித்த கவலைகளை நிவர்த்தி செய்யவும் பல்வேறு மாற்றங்கள் செய்து பரிந்துரைகள் முன்மொழியப்பட்டுள்ளன. தற்போது, ​​நடைமுறையில் உள்ள திட்டத்தின் கீழ், 25 …

தோடா மாவட்டத்தில் உள்ள ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், ராணுவ வீரர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

காஷ்மீரின் தோடா பகுதியில் ராணுவ முகாம் மீது நேற்றைய தினம் ( ஜூன் 11) இரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், ராணுவ வீரர்கள் கொடுத்த பதிலடியில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். 5 ராணுவ …

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள நிஹாமா பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே இன்று என்கவுன்டர் நடந்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து ஒரு போலீஸ் அதிகாரியின் கூற்றுப்படி, தெற்கு காஷ்மீர் மாவட்டத்தில் உள்ள நிஹாமா பகுதியில் தீவிரவாதிகள் இருப்பதாக குறிப்பிட்ட தகவலைப் பெற்ற பின்னர் பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைப்பு …

ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டேவின் பதவிக்காலத்தை 2024 ஜூன் 30 வரை ஒரு மாதம் நீட்டிக்க அமைச்சரவை நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

அமைச்சரவையின் நியமனக் குழு, ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் சி பாண்டேவின் பதவிக்காலத்தை ஒரு மாத காலத்திற்கு, அவரது சாதாரண ஓய்வு வயதுக்கு அப்பால் (மே 31, 2024), அதாவது …

அக்னிவீர் திட்டத்தின் கீழ், இந்திய ராணுவத்திற்கு அலுவலக உதவியாளர், ஸ்டோர் கீப்பர், டிரேட்ஸ்மேன், பொதுப் பணி, செவிலியர் உதவியாளர், மருந்தாளுநர், பெண்ராணுவ போலீஸார், ஆசிரியர்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் பாண்டிச்சேரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தகுதிவாய்ந்த …

இந்தியா மற்றும் மாலத்தீவு நாடுகளுக்கு இடையேயான உறவில் சமீப காலமாக விரிசல் ஏற்பட்டு வருகிறது. பிரதமர் மோடி லட்சத்தீவு பற்றிய புகைப்படத்தை பகிர்ந்ததற்கு மாலத்தீவு அமைச்சர்கள் இந்தியர்களை அவமதிக்கும் வகையில் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தனர். இந்தப் பிரச்சனையிலிருந்து இந்தியா மற்றும் மாலத்தீவு அரசுகளுக்கு இடையேயான உறவு சுமூகமாக இல்லை.

இந்நிலையில் மாலத்தீவு நாட்டிற்கு சொந்தமான …