ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த நிலையில் ஈரான் அதனை மறுத்துள்ளது. ஈரானும் இஸ்ரேலும் 24 மணி நேரத்திற்குள் ஒரு கட்டப் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமூக ஊடகங்களில் அறிவித்துள்ளார். இரு நாடுகளும் போர்களை முழுமையாக நிறுத்த ஒப்புக்கொண்டதாகக் கூறினார். இருப்பினும், ஈரான் அந்தக் கூற்றை மறுத்து, தாங்கள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை எனவும், போர் நிறுத்தத்திற்கான […]

ஈரான், இஸ்ரேல் போர் காரணமாக, மத்திய கிழக்கு பகுதிகளில் வான்வழித்தடங்கள் மூடப்பட்டுள்ளதால், சென்னை விமான நிலையத்தில் 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தோகா, அபுதாபி, குவைத், துபாய் உள்ளிட்ட 6 புறப்பாடு விமானங்கள், 5 வருகை விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தாய்லாந்து நாட்டிலிருந்து தோகா சென்று கொண்டிருந்த, 3 கத்தார் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்கள், தோகா செல்ல முடியாமல், சென்னையில் வந்து தரை இறங்கின. ஈரானிய அணுசக்தி தளங்கள் மீது […]

கத்தார், சிரியா, ஈராக்கில் அமைந்துள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீது ஈரான் நேற்றிரவு(ஜூன் 23) ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. ஈரானின் இந்த தாக்குதலுக்கு அரபு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் ரஷியா, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் போர் நிறுத்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளன. ராணுவ நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு ஈராக்கும் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில், அமெரிக்க ராணுவ தளம் மீதான ஈரான் தாக்குதல் குறித்து அதிபர் டொனால்டு […]

ஈரான் மீண்டும் ஒரு போரில் ஈடுபட்டுள்ளது. அதன் பரம எதிரிகளான இஸ்ரேலும் அமெரிக்காவும் தொடர்ந்து அதைத் தாக்கி வருகின்றன, மேலும் முழு மத்திய கிழக்கு நாடுகளும் இந்தத் தாக்குதல்களால் அதிர்ந்துள்ளன. இந்தப் போர் உலகிற்குப் புதியதாக இருக்கலாம், ஆனால் ஈரானின் வரலாறு போர்களால் நிறைந்துள்ளது. அது தனது இருப்பைப் பாதுகாக்க பல போர்களை நடத்தியது, சில சமயங்களில் படையெடுப்பாளர்களுடனும், சில சமயங்களில் தனது சொந்த மக்களுடனும். ரத்தத்தால் கறைப்பட்ட ஈரானின் […]

ஈரானின் முக்கிய அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதைக் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனுடன் தொலைபேசியில் பேசினார். இந்திய நேரப்படி இன்று அதிகாலை, அமெரிக்க ராணுவம் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan), மற்றும் நடான்ஸ் (Natanz) ஆகிய முக்கிய அணுசக்தி உற்பத்தி தளங்களை இலக்காகக் கொண்டு தாக்குதல்கள் நடத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இத்தாக்குதல்கள், […]

இஸ்ரேல் கடந்த வாரம் முதல் நடத்தி வரும் தாக்குதலில் ஈரானில் 657 பேர் பலியாகி இருப்பதாக அமெரிக்காவை சேர்ந்த மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கை மீண்டும் உலுக்கும் வகையில், இஸ்ரேல் – ஈரான் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 13) தொடங்கிய இந்த தாக்குதல்கள், 9-வது நாளாக தொடர்ந்து வருகிறது. இரு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு துணைநிற்காமல், தாக்குதல்களை பரஸ்பரமாக நடத்தி வருகின்றன. […]

ஆங்கிலத்தில் ஒரு பிரபலமான மேற்கோள் உள்ளது ‘நிரந்தர எதிரிகள் இல்லை, நிரந்தர நண்பர்கள் இல்லை, நிரந்தர நலன்கள் மட்டுமே.’ இந்த மேற்கோள் இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் மிகவும் பொருத்தமானது, ஏனென்றால் ஒரு காலத்தில் ஒருவருக்கொருவர் சிறந்த நண்பர்களாக இருந்த இஸ்ரேலும் ஈரானும் இன்று ஒருவருக்கொருவர் சத்தியப்பிரமாண எதிரிகளாக மாறிவிட்டன. மிகவும் சக்திவாய்ந்த ஏவுகணைகளை ஒருவருக்கொருவர் ஏவ முயற்சிக்கும் இந்த இரண்டு நாடுகளும் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்துக் கொண்டிருந்தன. அத்தகைய சூழ்நிலையில், […]

இஸ்ரேலும் ஈரானும் ஒரு பெரும் மோதலின் விளிம்பில் நிற்கின்றன. இந்த மோதல் ஒரு நேரடி போராக வெடிக்காதிருந்தாலும், அதன் சிதறலான தாக்கங்கள் ஏற்கனவே வெளிப்படத் தொடங்கியுள்ளது. உலக நாடுகள் கவனத்துடன் பார்க்கும் இந்த மோதலில், ஒரு முக்கியமான உண்மை வெளிச்சத்துக்குள் வந்துள்ளது. “இஸ்லாமிய உம்மா” என அழைக்கப்படும் ஆன்மீக ஒற்றுமை ஒன்று நடைமுறையில் இல்லை என்பது. 1979 இல் ஈரானில் ஏற்பட்ட இஸ்லாமியப் புரட்சி, அந்த நாடை தனித்து நடக்கச் […]

மத்திய கிழக்கு பகுதியில் ஈரானும் இஸ்ரேலும் இடையே நடக்கும் ஏவுகணை மற்றும் சைபர் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. இந்தச் சைபர் போர்களால் நேரடியாகத் தாக்கப்படாத மூன்றாம் நாடுகளும் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்த பரவலான தாக்கத்திற்கே “ஸ்பில்ஓவர் எஃபக்ட் (Spillover Effect)” என பெயர். அந்த வகையில், இந்தியா போன்ற நாடுகளும் இந்த தாக்கங்களால் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது என்பதால், தனிநபர்களாகவும், நிறுவனங்களாகவும் அதிகம் எச்சரிக்கையாக […]