ஹமாஸின் தலைவரான இஸ்மாயில் ஹனியேவின் தெஹ்ரானில் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இயக்கத்தின் மூத்த தலைவர் அயதுல்லா அலி கமேனி, ஈரானுக்கு இஸ்ரேலை நேரடியாகத் தாக்கும் உத்தரவைப் பிறப்பித்துள்ளார். ஹனியே கொல்லப்பட்டதாக ஈரான் அறிவித்த சிறிது நேரத்திலேயே, புதன்கிழமை காலை ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்தில் கமேனி இந்த உத்தரவை வழங்கினார், …
israel
இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள கோலன் ஹைட்ஸ் கால்பந்து மைதானத்தில் சனிக்கிழமை ராக்கெட் தாக்குதலில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளனர். மற்றும் குழந்தைகள் உட்பட பலர் காயமடைந்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஹிஸ்புல்லாவுக்கு எதிராக பதிலடி கொடுக்க தயார் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல் பிராந்தியத்தில் மிகப்பெரிய போர் பற்றிய அச்சத்தை எழுப்பியது. இஸ்ரேல் பிரதமர் …
காஸா பள்ளி முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உட்பட 30 பேர் உயிரிழந்தனர். இது ஹமாஸ் வளாகமாக பயன்படுத்தப்பட்டதாக ராணுவம் கூறியது.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் கடந்தாண்டு அக்டோபரிலிருந்து நடந்து வருகிறது. இந்த போரில் காசா தரப்பில் இதுவரை சுமார் 35 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். இதற்கிடையே போரை நிறுத்துவது குறித்த …
ISRAEL- IRAN WAR: ஈரான்-இஸ்ரேல் போர் தீவிரமடைந்தால், கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு $100ஐ தொடும் என எதிர்பார்க்கப்படுவதால், இந்தியாவின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (சிஏடி) பற்றிய கவலைகள் மீண்டும் எழுந்துள்ளன.
உலகில் 80 சதவீதம் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதோடு உலகின் மூன்றாவது பெரிய கச்சா எண்ணெய் நுகர்வோராக இந்தியா இருக்கிறது. ஈரான் மற்றும் …
போர்ச்சுக்கல் மற்றும் இஸ்ரேலுடன் இணைந்த எம்எஸ்சி ஏரீஸ் என்ற சரக்கு கப்பலை ஹார்முஸ் வளைகுடா பகுதியில் ஈரான் சிறை பிடித்து இருக்கிறது. இந்தக் கப்பலில் பணியாற்றிய 25 நபர்களும் சிறைபிடிக்கப்பட்ட நிலையில் அவர்களில் 17 பேர் இந்தியர்கள் என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும் இந்தக் கப்பலில் சிறைபிடிக்கப்பட்டவர்களில் பிலிப்பைன்ஸ் பாகிஸ்தான் மற்றும் …
மறு அறிவிப்பு வரும் வரை ஈரான், இஸ்ரேலுக்குச் செல்ல வேண்டாம் என்று வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இன்னும் ஓரிரு நாளில் தாக்குதல் நடத்த ஈரான் ராணுவம் தயாராகி வருகிறது. …
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் அமைந்துள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு முன்பாக அமெரிக்க விமானப் படையைச் சேர்ந்த வீரர் தீக்குளித்த சம்பவம் பதற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலைகளுக்கு எதிராக இஸ்ரேல் தூதரகம் முன்பு தீக்குளித்த நபர் அமெரிக்க விமானப்படையைச் சேர்ந்த AARON BUSHNELL என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சிஎன்என் செய்தி நிறுவனம் …
Air attack: காஸாவை கைப்பற்ற இதுவரை 31 ஆயிரம் முறை வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 29 ஆயிரத்தை கடந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் குழுவினர் இஸ்ரேல் மீது எதிர்பாரா தாக்குதலை நடத்தினர். இஸ்ரேலில் …
இந்திய கடற்படையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வீரர்கள், இஸ்ரேல் நாட்டிற்கு உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் அந்நாட்டு முதன்மை நீதிமன்றம், முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள் 8 பேருக்கு மரண தண்டனை வழங்கியது. கத்தார் நாட்டில் உள்ள அல் தஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் அண்ட் கன்சல்டன்சி சர்வீசஸ் என்ற கம்பெனியில் முன்னாள் இந்திய கடற்படை …
இஸ்ரேலிய ராணுவம் கைது செய்யப்பட்ட ஹமாஸ் போராளிகளை அரை நிர்வாணப்படுத்தி அணிவகுக்கச் செய்த சம்பவம் உலக அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான புகைப்படங்களையும் இஸ்ரேலில் பாதுகாப்பு பிரிவு வெளியிட்டு இருக்கிறது.
இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன்டையே 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் போர் சற்று ஓய்ந்திருந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் முதல் …