மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து சிரப்பால் குழந்தைகள் உயிரிழந்த அதிர்ச்சி மறைவதற்குள் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் வெளியாகி மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் இருமல் சிரப்பால் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தன. இந்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தநிலையில், மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு வழங்கப்பட்ட ஆண்டிபயாடிக் மருந்து பாட்டிலில் […]

இந்தியாவின் தலைசிறந்த நரம்பியல் நிபுணர் டாக்டர் சுதிர் குமார், குழந்தைகளுக்கு சளி மற்றும் இருமல் தொற்றுக்கு இருமல் சிரப் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்றும், ஏனெனில் அவை “மீட்பை விரைவுபடுத்தாது” என்று கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் “ குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் பெரும்பாலும் ஒரு வாரத்தில் தானாகவே சரியாகிவிடும் வைரஸ் தொற்றுகளால் ஏற்படுகின்றன. இருமல் சிரப்கள் இந்த நோய்களைக் குணப்படுத்தவோ குறைக்கவோ செய்யாது. ஆண்டிஹிஸ்டமின்கள், இரத்தக் கொதிப்பை நீக்கும் […]

மறு உத்தரவு வரும் வரை தமிழகம் முழுவதும், “சென் பார்மா” மருந்து நிறுவனத்தின் விற்பனையையும், விநியோகத்தையும் நிறுத்தி வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக மருந்து கட்டுப்பாட்டு துணை இயக்குநர் வெளியிட்ட அறிக்கையில்; மத்தியப் பிரதேச அரசிடம் இருந்து கடந்த 1-ம் தேதி கடிதம் வந்தது. மக்களின் உயிர்காக்கும் பிரச்சினை என்பதால் உடனடியாக, காஞ்சிபுரத்தில் செயல்படும் ‘சென் பார்மா’ நிறுவனத்தில் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, பேட்ச் 13-ல், தயாரிக்கப்பட்ட, கோல்ட்ரிப் […]

விளையாட்டின் போது ஏற்பட்ட ஒரு சிறிய தவறு ஒரு குடும்பத்திற்கு பெரும் கவலையாக மாறியது. மத்தியப் பிரதேச மாநிலம் ஹர்தாவில் அரங்கேறி உள்ளது.. காலை 11:30 மணியளவில், ஒன்றரை வயது ஆண் குழந்தை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது, ​​மொபைல் சார்ஜரின் பின் அதன் கண்ணில் குத்தியது.. உடனடியாக குழந்தையின் பெற்றோர் அவனை உள்ளூர் மருத்துவமனைக்கு விரைந்தனர், ஆனால் அங்குள்ள மருத்துவர்கள் அவனது நிலை மோசமாக இருந்ததால் போபாலுக்கு அனுப்பினர். மாலை […]