fbpx

சென்ற மே மாதம் 4ம் தேதி முதல் மணிப்பூர் மாநிலத்தில், இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, அங்கு கலவரம் வெடித்தது. இதனால் இணைய சேவை முற்றிலுமாக, முடக்கி வைக்கப்பட்டது. அதேபோல, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது.

ஆனால் தற்போது அங்கு மீண்டும் அமைதி திரும்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. ஆகவே பள்ளிகளை …

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இணைய சேவையும் பல பகுதிகளில் முடங்கியுள்ளது. இம்பால் பள்ளத்தாக்கிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வசிக்கும் மெய்டீஸ் மற்றும் மலைகளில் குடியேறிய குக்கி பழங்குடியினருக்கு இடையே, மெய்டீஸ் பட்டியல் பழங்குடியினர் (ST) பிரிவின் கீழ் சேர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையின் பேரில் தொடர்ந்து இனக்கலவரம் …

கடந்த திங்கட்கிழமை ஹரியானா மாநிலத்தில் இருக்கின்ற நுஹ் மாவட்டத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் இயக்கம் நடத்திய ஊர்வலத்தை ஒரு மர்ம கும்பல் தடுக்க முயற்சி செய்தது. இதனை தொடர்ந்து, இரண்டு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, பின்பு அந்த தகராறு வன்முறையாக மாறியது. ஆகவே அந்த மாவட்டத்திலும் மற்றும் அதற்கு அருகில் உள்ள பல்வால் மாவட்டத்திலும் …

மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக இருக்கின்ற மைதேயி சமூகத்தினருக்கும் சிறுபான்மை இனமான குக்கி பழங்குடியின சமூகத்தினருக்கும் இடையே நிலவி வரும் மோதல் காரணமாக, அந்த மாநிலத்தில் 2️ மாதங்களுக்கு மேலாக பதட்டமான சூழ்நிலை நீடித்து வருகிறது. இதனால் பலர் முகாம்க்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில்தான் மணிப்பூர் மாநிலத்திற்கு சென்றுள்ள எதிர்க்கட்சி கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் …

மணிப்பூரில் இரண்டு பெண்களை நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என மழைக்கால கூட்டத்தொடரை எதிர்க்கட்சிகள் முடக்கி வருகின்றன. மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. மணிப்பூர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தனது வேதனையை தெரிவித்ததோடு மத்திய-மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள …

மணிப்பூரில் இரு சமூகத்தினரிடையே வெடித்திருக்கும் மோதலுக்கு இன்றுவரை தீர்வு கிடைக்கவில்லை. தொடர்ந்து அங்கு துப்பாக்கிக் குண்டுகள் சத்தம் கேட்பதாகவும், வீடுகள் தீ வைத்து எரிக்கப்படுவதாகவும் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. பல இன்னல்களுக்கு இடையே செய்தியாளர்கள் அங்கு சென்று பல பிரத்யேக தகவல்களை தெரிவித்து வருகின்றனர். நேற்று காலைகூட, மேற்கு இம்பால் பகுதியில் மெய்டீஸ் மற்றும் …

மணிப்பூரில் கடந்த இரண்டு மாதங்களாக இனக்கலவரமும் போராட்டமும் தொடர்ந்து வருகிறது. கலவரத்தை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், எதுவும் பயன் தந்ததாக தெரியவில்லை. கலவரத்தை கட்டுப்படுத்த முடியாமல் மத்திய, மாநில அரசுகள் திணறி வருகிறது. 

மாநில காவல்துறை ஒரு தலைபட்சமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், நிலைமையை கட்டுக்குள் கொண்டு …

மணிப்பூரில் ஏற்பட்டுள்ள கலவரம் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்று என முதலமைச்சர் பிரேன் சிங் கருத்து தெரிவித்து உள்ளார்.

மணிப்பூரின் மெய்தேய் சமூகத்தினரைப் பட்டியல் பழங்குடியினராக அங்கீகரிப்பதற்கு ஆதரவாக அம்மாநில உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு, அம்மாநிலத்தின் பழங்குடிச் சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஓபியம் பயிரிடப்படுவதைத் தடுக்கும் நோக்கில் மலைப்பகுதிகளில் வசிக்கும் குகி-ஜோமி பழங்குடியினர் மீது …

மணிப்பூருக்கு இரண்டு நாள் பயணமாக சென்றுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ஒத்த கருத்துடைய கட்சி தலைவர்களை சந்தித்து பேசச உள்ளார். ஐக்கிய நாகா கவுன்சில் (UNC) தலைவர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் உறுப்பினர்கள் ஆகியோரை இம்பாலில் உள்ள விடுதியில் ராகுல் காந்தி இன்று சந்திக்க உள்ளதாக மணிப்பூர் காங்கிரஸ் தலைவர் கெய்ஷாம் …

வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஜூன் 29-ம் தேதி செல்ல உள்ளார்.

மணிப்பூர் மாநிலத்தில் மைதேயிபிரிவினர் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி போராடி வருகின்றனர். ஏற்கனவே பழங்குடியினர் பட்டியலில் இருக்கும் குகி இனத்தவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த மே மாதம் 3-ம் தேதி …