fbpx

குவைத்தின் மங்காப் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் நேற்றைய தினம் திடீரென பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் தரைதளத்தில் சமையலறையில் பிடித்த தீ மளமளவென பரவியது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த விபத்தில் சிக்கி …

மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகப்போவதாக வெளியான தகவலுக்கு நடிகர் சுரேஷ் கோபி மறுப்பு தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பதவியேற்பு நேற்று நடைபெற்றது. இதில் கேரளாவின் முதல் பாஜக எம்.பி.யாக திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டு 70,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற மலையாள சூப்பர் ஸ்டார் சுரேஷ் கோபி மத்திய இணை அமைச்சராக …

ரேஷன் கடைகளில் பொருட்கள் விநியோகம் செய்வது தொடர்பாக குறைகள் இருந்தால் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசு பொது விநியோகத் திட்டம் / சிறப்பு பொது விநியோகத் திட்டம் ஆகியவற்றின் மூலம் அத்தியாவசியப் பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் …

Mettur dam: கோடை மழை போதுமான அளவுக்கு பெய்யாததால், வரும் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை என்றும் நீர் வரத்தை பொறுத்து, அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என்றும் வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவில் கோடைக்கால வெப்பம் சமீப காலமாக இயல்பை விட …

நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கவுள்ள நிலையில், அண்ணாமலைக்கு மத்திய இணை அமைச்சர் பொறுப்பு வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் பரபரப்பாக நடைபெற்று முடிவடைந்துள்ளது. இந்த தேர்தலில் பாஜக மற்றும் இந்தியா கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால் தொங்கு பாராளுமன்றம் உருவாகியுள்ளது. இதனால், பாஜக மற்ற கூட்டணி கட்சிகளின் …

அனுமதியற்ற மற்றும் வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த, ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணைகளில் குறிப்பிடப்பட்டுள்ள 2017-ம் ஆண்டு விதிகளுக்கு உட்பட்டு எவ்வித மாற்றமும் இல்லாமல் 29.02.2024 வரை விண்ணப்பிக்க தமிழக அரசு ஏற்கனவே கால …

புதுச்சேரியில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தலைமையில் கடந்த 7-ம் தேதி நடத்தப்பட்ட சோதனையில் ‘பிங்க்’ நிறத்தில் விற்பனை செய்யப்படும் பஞ்சு மிட்டாயில் ‘ரோடமின்-பி’ என்ற ரசாயனம் கலப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, விற்பனையில் ஈடுபட்ட வடஇந்தியர்கள் குறித்த தகவல்கள் திரட்டப்பட்டன.

புதுச்சேரிக்கு அதிகமானோர் சுற்றுலா வருகின்றனர். அவர்களின் குழந்தைகளைக் குறிவைத்து பஞ்சு மிட்டாய் விற்கப்படுகிறது. …

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பயன் பெற புதிய ரேஷன் அட்டைகள் கேட்டு பலர் விண்ணப்பித்து வந்தனர். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தற்போது வரை புதிய அட்டைகள் விநியோகிக்கப்படவில்லை. மகளிர் உரிமைத் தொகை திட்டப் பணிகளில் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டதால் புதிய ரேஷன் அட்டைகள் வழங்குவது நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் புதிய ரேஷன் …

வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மத்திய அரசு தன் பங்காக வீடு கட்ட 72 ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்குகிறது என அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது செய்தி குறிப்பில்; நாகப்பட்டினம் மாவட்டம் வெண்மணி ஊராட்சியில் பிரதம மந்திரி ஊரக குடியிருப்புத் திட்டத்தின் கீழ் 127 பயனாளிகளுக்கு வீடுகள் கட்ட அனுமதி …

அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வரும் வழக்கில் அனிதா ராதாகிருஷ்ணன் வருமானத்தை மீறி 4.90 கோடிக்கு சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது.

தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், 2001-2006 …