fbpx

மகளிர் சுயதவிக் குழுக்களை சேர்ந்த 12,000 பெண் தொழில்முனைவோர்களுக்கு ரூ.1.56 கோடியில் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்படும்.

சட்டப்பேரவையில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை மானியக் கோரிக்கையின் பொழுது பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன் தென்னை நார் பொருட்கள் தயாரிக்கும் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களுக்கு 25% மானியம் வழங்கப்படும். மகளிர் சுயதவிக் குழுக்களை சேர்ந்த …

தூய்மைக் காவலர்களுக்கு மாதாந்திர மதிப்பூதியம் ரூ.5000 ஆக உயர்த்தப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சித்துறை தொடர்பான மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது அமைச்சர் ஐ.பெரியசாமி ஊரகப் பகுதிகளில் பணிபுரியும் 66 ஆயிரத்து 13 தூய்மைக் காவலர்களின் மாதாந்திர மதிப்பூதியம் ரூ.3600-லிருந்து ரூ.5000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். நகர்ப்புறத்தை ஒட்டி உள்ள …

குரூப் 4 தேர்வு முறைகேடு குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அரசு நிர்வாகம் முறையாக நடைபெற வேண்டுமானால், அதற்கு அடித்தளமாக விளங்குபவர்கள் அரசுப் பணியாளர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. மக்களுக்குத் தேவையான சான்றிதழ்களை வழங்குவது, பேரிடர் காலத்தில் மீட்பு, நிவாரணம், மறுவாழ்வு போன்ற பணிகளை …

சென்னை பெருங்குடியில், வழக்கறிஞர் ஜெய்கணேஷ் என்பவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள வழக்கறிஞர் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு சட்ட பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில; சென்னை பெருங்குடியில், வழக்கறிஞர் ஜெய்கணேஷ் என்பவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி …

ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை முதல்வர் ஸ்டாலின் இன்று மீண்டும் பேரவையில் தாக்கல் செய்ய உள்ளார்.

தமிழக அரசு ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் அவசர சட்ட மசோதாவை கடந்த ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்காக அனுப்பியது. அவரச சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அன்றைக்கே ஒப்புதல் …

தமிழகத்தில் பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப் பூங்கா திட்டத்தினை சிப்காட் நிறுவனத்தின் மூலம் செயல்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சருக்கு எழுதி உள்ள கடிதத்தில்; தமிழ்நாட்டில் பிஎம் மித்ரா (PM MITRA) பூங்காவினை அமைத்திட விருதுநகர் மாவட்டத்தில் உள்ள …

ஆவின் பால் மற்றும் அதன் உப பொருட்கள் தங்கு தடையின்றி பொதுமக்களுக்கு கிடைக்க முதல்வர் வழிவகை செய்ய வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆவின் நிறுவனம் தனது மொத்த பால் உற்பத்தியை பெருக்கும் வகையில் நவீனத் தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்படும் என்றும், பிற மாநிலங்களுக்கு வணிகத்தை விரிவுபடுத்துவது …

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; நோன்பு நோற்கும்‌ இஸ்லாமிய மக்களுக்கு புனித ரமலான்‌ மாதத்தில்‌ நோன்பு கஞ்சி தயாரிக்க ஒவ்வொரு ஆண்டும்‌ பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி தமிழக அரசால்‌ வழங்கப்பட்டு வருகிறது.கடந்த ஆண்டுகளைப்‌ போலவே, 2023 ஆண்டிலும்‌ ரமலான்‌ மாதத்தில்‌ நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்க வேண்டும்‌ என்று இஸ்லாமிய மக்களிடமிருந்து …

புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாட்டில் பிற மாநிலத் தொழிலாளர்கள் காலம் காலமாக பல்வேறு பணிகளில், குறிப்பாக தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு, தமிழ்நாட்டின் மேம்பாட்டிற்கு, தமிழ்நாட்டின் கட்டமைப்பிற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். தொழிலாளர்களுக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை, அவர்கள் …

தன்னை சந்திக்க வரும் தொண்டர்கள் ஆடம்பரத்தை தவிர்த்து, புத்தகங்களை பரிசளியுங்கள் என திமுகவினருக்கு அமைச்சர் உதயநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; இளைஞர் அணி செயலாளராக கழக நிகழ்ச்சிகளிலும், அமைச்சராக அரசு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்யும் போது, நீங்கள் அளிக்கும் வரவேற்பைக் கண்டு நெகிழ்கிறேன். என் …