மும்பையில் சுமார் 400 கிலோ RDX வெடிகுண்டுகள் பொருத்தப்பட்ட 34 மனித வெடிகுண்டுகள் இருப்பதாக காவல்துறையினருக்கு மிரட்டல் வந்தது.. இதையடுத்து மும்பையில் முழுவதும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. மும்பையில் உள்ள 34 வாகனங்களில் சுமார் 400 கிலோ RDX வெடிகுண்டுகள் பொருத்தப்பட்டுள்ள “மனித குண்டுகள்” இருப்பதாகவும், ஒட்டுமொத்த நகரத்தையும் உலுக்கும்” பயங்கர வெடிப்புகள் ஏற்படும் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.. வாட்ஸ்அப்பில் போக்குவரத்து காவல்துறை உதவி எண்ணுக்கு இந்த […]

இந்தியாவின் சாலைகள் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான உயிர்களை காவு வாங்கி வருகின்றன. சில நகரங்கள் மிகப்பெரிய அளவிலான இறப்புகளுக்கு தனித்து நிற்கின்றன. டெல்லி, பெங்களூரு, ஜெய்ப்பூர் மற்றும் அகமதாபாத் ஆகியவை வாகன ஓட்டிகளுக்கு மிகவும் ஆபத்தானவையாக உருவெடுத்துள்ளன. அதிக வேகம் மற்றும் பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுதல் ஆகியவை முக்கிய காரணங்களாகக் குறிப்பிடப்படுகின்றன. 2023 ஆம் ஆண்டில், அகமதாபாத்தில் சாலை விபத்துகள் காரணமாக 535 இறப்புகள் பதிவாகியுள்ளன. எனவே இந்த […]

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் 48வது ஆண்டு பொதுக் கூட்டத்தில் ( AGM) , ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனர் நீதா அம்பானி ஒரு சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தை அறிவித்தார் . இதன் கீழ், ரிலையன்ஸ் அறக்கட்டளை மும்பையின் மையப்பகுதியில் 2,000 படுக்கைகள் கொண்ட ஒரு நவீன மருத்துவ நகரத்தை உருவாக்கி வருகிறது . இந்த ஆண்டு அறக்கட்டளையின் கிராமப்புற மேம்பாட்டு முயற்சிகள் 55,000க்கும் மேற்பட்ட கிராமங்களில் 15 லட்சம் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தியுள்ளதாக […]

இன்று மும்பையிலிருந்து ஜோத்பூருக்குச் சென்ற ஏர் இந்தியா AI645 விமானத்தில், செயல்பாட்டுக் கோளாறு காரணமாக பாதியிலேயே திரும்பியது.. விமான குழுவினர், நிலையான இயக்க நடைமுறைகளை (SOPs) பின்பற்றி, விமானம் புறப்படுவதை நிறுத்த முடிவு செய்து, விமானத்தை பாதுகாப்பாக மீண்டும் விமான நிலையம் கொண்டு வந்தனர். விமானப் பயணம் பாதியிலேயே நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஏர் இந்தியா இடையூறுக்கு வருத்தம் தெரிவித்ததுடன், பயணிகள் ஜோத்பூரை அடைவதை உறுதி செய்ய மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக […]

மகாராஷ்டிர மாநிலத்தில் மும்பை நகர்ப்புறம் மற்றும் மும்பை புறநகர் பகுதிகள் தானே, ராய்கட் மற்றும் பால்கர் மாவட்டங்களில் ஜிஎஸ்டிஆர்-3-பி படிவம் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இம்மாதம் 27-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய மறைமுகம் மற்றும் சுங்கவரி வாரியம் தெரிவித்துள்ளது. இது குறித்து வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மும்பையில் பல்வேறு இடங்களில் பெய்த கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு வரி செலுத்துவோர் ஜூலை மாதத்திற்கான […]

மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் உள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் இருந்து 6.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஐ பிஎல் 2025 ஜெர்சிகள் திருடப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியின்படி, இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக 40 வயதுடைய பாதுகாப்புக் காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்ட காவலர் ஃபரூக் அஸ்லம் கான், 261 ஜெர்சிகளைத் திருடிச் சென்றதாகவும், ஒவ்வொன்றும் சுமார் […]

மும்பை – எக்ஸ்பிரஸ்வேயில் பிரேக் செயலிழந்த காரணமாக கட்டுப்பாட்டை இழந்த டிரக் அடுத்தடுத்து 20-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது மோதியது. இதில் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில் இருந்து புனே வரையிலான எக்ஸ்பிரஸ்வேயில் , ராய்காட் மாவட்டத்தின் கோபோலி என்ற இடத்தில் டிரக் ஒன்று வந்து கொண்டு இருந்தது. திடீரென பிரேக் செயலிழந்ததால் டிரக் கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்று கொண்டிருந்த சொகுசு கார்கள் […]