ராணிப்பேட்டை முத்துக்கடையில் விசிக சார்பில் மதச்சார்பின்மை காப்போம் மக்கள் எழுச்சி பேரணியின் தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் திருமாவளவன் கலந்து கொண்டு பேசினர். தொடர்ந்து அவர் பேசியதாவது: ஆளும் பாஜக அரசாங்கம் மதம் வேண்டும் என செயல்படுகிறது. மதம் மக்களுக்கானது. அரசாங்கத்திற்கு ஆனது இல்லை என அம்பேத்கர் எழுதிய சட்டத்தில் உள்ளது. மதத்தின் மீது பற்றுள்ள மகாத்மா காந்தியே அம்பேத்கரின் கருத்தை ஏற்றுக்கொண்டார். காங்கிரசோடு நமக்கு வேறுபாடுகள் […]

பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக நேற்று தமிழ்நாட்டிற்கு வந்திருந்தார். மாலத்தீவிலிருந்து தனி விமானம் மூலம் நேற்று தூத்துக்குடி வந்த அவர், ரூ.4,800 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப்பணிகளை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இன்றைய தினம் அரியலூர் மாவட்​டம் கங்​கை​கொண்ட சோழபுரம் பிரகதீஸ்​வரர் கோயில் வளாகத்​தில், மத்​திய கலா​ச்சா​ரத் துறை சார்​பில் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திரு​வா​திரை விழா, கங்​கை​கொண்ட சோழபுரம் […]

பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாகப் பதவியேற்ற 51,000க்கும் மேற்பட்டோருக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் பணி நியமனக் கடிதங்களை வழங்கினார். இளைஞர் சக்திக்கு அதிகாரம் அளிப்பதற்கும், அவர்களை வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்குவதில் ஊக்கிகளாக மாற்றுவதற்கும் நமது அரசாங்கம் கொண்டுள்ள உறுதிப்பாட்டை ரோஸ்கர் மேளா பிரதிபலிக்கிறது என்று அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, “உங்கள் இந்தப் புதிய பயணத்திற்கு […]

டிரினிடாட் மற்றும் டொபாகோவிற்குப் பிறகு, பிரேசில் தனது மிக உயர்ந்த குடிமகன் விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி கௌரவித்துள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 8, 2025) பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரேசில் அதிபர் லூலா முன்னிலையில் இந்தியாவும் பிரேசிலும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பரிமாறிக் கொண்டன. பிரேசிலின் அதிபர் லூலா டா சில்வா, பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரேசிலின் மிக உயர்ந்த குடிமகன் விருதான ‘கிராண்ட் காலர் ஆஃப் தி […]

ஜூலை மாதம் தொடங்கியுள்ள நிலையில், விவசாயிகளுக்கான முதன்மை வருமான ஆதரவுத் திட்டமான பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனாவின் 20வது தவணைக்காக இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான விவசாயிகள் காத்திருக்கின்றனர். பிரதமர் நரேந்திர மோடி அடுத்த தவணையை விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், நிகழ்வின் தேதி மற்றும் இடம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதனிடையே, விவசாயிகள் தங்கள் பயனாளிகளின் நிலையைச் சரிபார்த்து, அவர்கள் தகுதியுள்ளவர்கள் என்பதையும், பிரதம மந்திரி கிசான் […]

ரினிடாட் மற்றும் டொபாகோவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, இரவு உணவின் போது சோஹாரி என்ற சிறப்பு பாரம்பரிய இலையில் உணவு பரிமாறப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி தற்போது டிரினிடாட் மற்றும் டொபாகோ சுற்றுப்பயணத்தில் உள்ளார். வெள்ளிக்கிழமை (ஜூலை 4, 2025) அங்கு அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது, ​​சோஹாரி என்ற சிறப்பு இலையில் அவருக்கு உணவு பரிமாறப்பட்டது. மேலும், இந்த […]

நீண்ட காலமாக கோரிக்கை விடுத்துவந்த பரமக்குடி முதல் ராமநாதபுரம் வரையிலான நான்கு வழி தேசிய நெடுஞ்சாலைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 1, 2025) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. பரமக்குடி நெடுஞ்சாலைத் திட்டத்தை அமைப்பதற்காக வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை , ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் புதுமைத் திட்டம் , […]