அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சார்பில் எஸ்பியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க மாநில பொதுச்செயலாளர் இருளாண்டி தலைமையில் ஏராளமானோர் மதுரை மாவட்ட எஸ்பி அரவிந்த்திடம் நேற்று புகார் மனு அளித்தனர். புகார் மனு வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி 18ம் தேதி பிரசாரம் செய்தார். […]

எஸ்.ஐ தேர்வில் இனி காவல் துறை இட ஒதுக்கீடு கிடையாது, அனைவருக்கும் ஒரே மாதிரியான எழுத்து மற்றும் உடல் தகுதி தேர்வு நடைபெறும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், 1,299 காவல் உதவி ஆய்வாளர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மே 4-ம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. இதையடுத்து, சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் ஆர்வமுடன் விண்ணப்பித்தனர். […]

சென்னையில் கடந்த 13 நாட்களாக போராட்டம் மேற்கொண்ட தூய்மைப் பணியாளர்களை காவல் துறையினர் கைது செய்தனர். சென்னை மாநகராட்சி மண்டலம் 5, 6 பகுதிகளுக்கான தூய்மைப் பணி தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்தும், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் இரண்டு மண்டல தூய்மைப் பணியாளர்களில் என்யூஎல்எம் பிரிவைச் சேர்ந்தவர்கள் கடந்த 13 நாட்களாக ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் மேற்கொண்டனர். தூய்மைப் பணியாளர்களுடன் அரசு தரப்பு மேற்கொண்ட […]

மத்தியப் பிரதேசத்தின் மொரேனாவில் கூலி இல்லாமல் வேலை செய்ய மறுத்ததால், குர்ஜார் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரால் ஒரு தலித் நபர் கொடூரமாக தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்டவரை அடித்தது மட்டுமல்லாமல், அவரது குடிசைகளையும் தீக்கிரையாக்கினார். நேற்று மாலை, மல்பசாய் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்தது.. தற்போது இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. கிராமத்தைச் சேர்ந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த ரிங்கு சக்பர் என்பவர், ரவி […]