மெக்சிகோவை புரட்டிப்போட்ட கனமழை, வெள்ளத்தில் சிக்கி இதுவரை பலியானோர் எண்ணிக்கை 130 ஆக அதிகரித்துள்ளது. வட அமெரிக்க நாடான மெக்சிகோவை பசிபிக் பெருங்கடல் சூழ்ந்துள்ளது. கடந்த 12-ம் தேதி காற்றழுத்த தாழ்வுநிலை அங்கு உருவானது. இது புயலாக வலுப்பெற்றது. மெக்சிகோவின் கடலோர மாகாணங்களான ஹிடால்கோ, புபேல்லா மற்றும் வெராக்ரூஸ் நகரை மையமாகக் கொண்டு இந்தப் புயல் தாக்கும் என கணிக்கப்பட்டது. அப்பகுதியில் கடந்த 4 நாளாக தொடர் மழை கொட்டி […]

கனமழை எதிரொலியாக நெல்லையை தொடர்ந்து மேலும் 2 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் நள்ளிரவு முதல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து, மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், சில மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடகிழக்கு பருவமழை: தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளிலிருந்து நாளை விலகக்கூடும். அதே சமயம், வடகிழக்கு […]

தமிழகத்தில் இன்று வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில், சென்னை உள்ளிட்ட 26 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளிலிருந்து நாளை விலகக்கூடும். அதே சமயம், வடகிழக்கு பருவமழை, தமிழகம், புதுச்சேரி – காரைக்கால் பகுதிகள், கேரளா – மாஹே, தெற்கு உள் கர்நாடகம், ராயலசீமா, தெற்கு கடலோர ஆந்திரப் […]

வடகிழக்குப் பருவமழை காலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நியாய விலைக் கடைகளில் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் நவம்பர் மாதத்திற்குரிய அரிசியை அக்டோபரிலேயே பெற்றுக் கொள்ளலாம் என்று உணவு, உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தில் முன்னுரிமை மற்றும் முன்னுரிமையற்ற குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி மற்றும் கோதுமையுடன் சர்க்கரை, மண்ணெண்ணெய் மற்றும் சிறப்புப் பொது […]

தமிழகத்தில் நாளை முதல் வடகிழக்குப் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில்: தென்மேற்குப் பருவமழை இந்தியப் பகுதிகளிலிருந்து நாளை விலகக்கூடும். அதேநேரத்தில், வடகிழக்குப் பருவமழை தமிழகம்-புதுச்சேரி-காரைக்கால் பகுதிகள், கேரளா-மாஹே, தெற்கு உள் கர்நாடகம், ராயலசீமா, தெற்கு கடலோர ஆந்திர பகுதிகளில் நாளை தொடங்க வாய்ப்புள்ளது. தென்மேற்கு வங்கக்கடல்- பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் […]

தமிழகத்தில் இன்று முதல் 19-ம் தேதி வரை 6 நாட்கள் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: ”தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் கடலோர ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் […]

தமிழகத்தில் மதுரை, கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று பெரும்பாலான இடங்களிலும், நாளை முதல் 16-ம் தேதி வரை […]

தமிழகத்தில் திருச்சி, மதுரை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: தெற்கு கடலோர ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரளா கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. […]

அடுத்த சில நாட்களில் அமெரிக்காவின் தென்கிழக்கு கடற்கரையை ஒரு பெரிய சூறாவளி தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நோர் ஈஸ்டர் என்று அழைக்கப்படும் இந்த சக்திவாய்ந்த புயல், அடுத்த வார தொடக்கத்தில் கிழக்கு கடற்கரை முழுவதும் பேரழிவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயல் ஆபத்தான அலைகள், பலத்த மழை மற்றும் வெப்பமண்டல சூறாவளியைப் போல பலத்த காற்றையும் கொண்டு வரும். புயல் வடக்கு நோக்கி நகர்ந்து தீவிரமடையும் போது, ​​அதன் […]

தமிழகத்தில் காஞ்சிபுரம், கோவை, நீலகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்; தென்னிந்திய பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று மற்றும் நாளை, வட தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் இடி, […]