பாலியல் வன்கொடுமைக்கும், இளம் வயதினரின் உண்மையான காதல் வழக்குகளுக்கும் இடையே வேறுபடுத்திப் பார்க்க வேண்டிய அவசியத்தை உச்சநீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது.. பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழ் சம்மத வயதை 18லிருந்து 16 ஆக குறைக்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.. இந்த மனு நேற்று நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.. […]

சொத்துக் குவிப்பு வழக்கு மறுவிசாரணைக்குத் தடை கோரி அமைச்சர் ஐ. பெரியசாமி தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை செய்ய உள்ளது. தமிழக அமைச்சர் ஐ. பெரியசாமி கடந்த 2006-11 திமுக ஆட்சி காலத்தில் 2006-2010 வரையிலான காலகட்டத்தில் வருவாய், சட்டம், சிறை மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். அப்போது வருமானத்துக்கு அதிகமாக ரூ. 2 கோடியே 1 லட்சத்து 35 ஆயிரம் […]

ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரிய மனுவில், மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கடந்த 2019-ம் ஆண்டு, ஆகஸ்ட் 5, அன்று ஜம்மு & காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழக்கும் அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 370-ஐ நீக்கியது, மேலும் மாநிலத்தை ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.. மத்திய அரசின் இந்த உத்தரவை […]

கர்நாடகாவின் சித்ரதுர்காவை சேர்ந்த ரசிகர் ரேணுகா சாமி கொலை வழக்கில், நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கௌடா உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர்.. இவர்கள் அனைவரும் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.. இந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம் 17 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.. இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்த கர்நாடக அரசு, தர்ஷன், பவித்ரா கவுடா உள்ளிட்ட 7 […]

குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 2,800 நாய்களைக் கொன்றதாக மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி தலைவர் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார். கர்நாடக எம்.எல்.சி எஸ்.எல். போஜேகவுடா இன்று சட்டமன்றத்தில் பேசிய போது , “நாய்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றத்தை நாடும் முதல் மாநிலமாக கர்நாடகா இருக்கட்டும்.. உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட வேண்டும்… ” என்று கோரினார். மேலும் “விலங்குகள் மீது எங்களுக்கும் அக்கறை உண்டு, ஆனால் […]

முன் அறிவிப்பு இல்லாமல், விசாரணை நடத்த வாய்ப்பு இல்லாமல் மற்றும் தகுதிவாய்ந்த அதிகாரியிடமிருந்து நியாயமான உத்தரவு இல்லாமல் பீகார் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து எந்த பெயரும் நீக்கப்படாது என்று இந்திய தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. துணை தேர்தல் ஆணையர் சஞ்சய் குமார் தாக்கல் செய்த கூடுதல் பிரமாணப் பத்திரத்தில், உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்படாது என்று தேர்தல் ஆணையம் […]