தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகை கடந்த 4 நாட்களாக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தப் பண்டிகையின் கடைசி நாள் ஆன இன்று காணும் பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தப் பண்டிகையின் போது விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும். மேலும் பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினருடன் சுற்றுலா செல்வதும் வழக்கமாகக் கொண்டுள்ளனர் . இந்நிலையில் காணும் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக மதுரையில் இருந்து சுற்றுலா வந்த குழுவை சார்ந்த 3 நபர்கள் ஆற்றில் மூழ்கி […]

சேலம் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு சாதி பெயரை குறிப்பிட்டு சம்மன் அனுப்பிய விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் இந்திய வருவாய்த்துறை மற்றும் ஜிஎஸ்டி துணை ஆணையர் உண்ணாவிரதம் இருக்கும் நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து ஜனாதிபதிக்கும் புகார் மனு ஒன்றையும் அனுப்பி இருக்கிறார் . சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த அப்பம்மா சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த ஏழை விவசாயிகளான […]

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும் அதிமுக கட்சியின் நிறுவனருமான மக்கள் திலகம் டாக்டர் எம்.ஜி.ஆரின் 107 ஆவது பிறந்தநாள் விழா தமிழகமெங்கும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் எம்ஜிஆர் பிறந்த பிறந்த நாளை முன்னிட்டு அவரது படத்திற்கு பதிலாக அரவிந்த்சாமியின் படத்தை பேனரில் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. எம்ஜிஆரின் பிறந்த நாள் விழாவை தமிழகம் முழுவதும் அதிமுக கட்சியினர் மற்றும் எம்ஜிஆர் ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் […]

திருச்சி மணிகண்டம் பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் கும்பல் ஒன்று பதுங்கி இருப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்திய காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் ஓலையூர்-மணிகண்டம் சாலையில் 5 பேர் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பது காவல்துறைக்கு தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து 5 பேரையும் சுற்றி வளைத்த காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த அரிவாள் இரும்பு கம்பி […]

தமிழகத்தின் சிறப்பு மிக்க அடையாளங்களில் ஒருவராக விளங்கும் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்த சம்பவம் மீண்டும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகம் முழுவதும் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்ட இந்த தினத்தில் ஆளுநர் மாளிகையான ராஜ் பவனில் காவிநிற உடை அணிந்து கழுத்து மற்றும் நெற்றியில் பட்டையுடன் திருவள்ளுவர் இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி இருக்கிறது. திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு ராஜ் பவனின் எக்ஸ் வலைதளத்தில் தமிழக […]

கன்னியாகுமரி மாவட்ட தலைநகரான நாகர்கோவில் மாநகராட்சியின் மேயரை கார் ஏற்றி கொலை செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருக்கும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கவுன்சிலரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கூட்டணி கட்சியைச் சார்ந்த மேயரை கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ். இவர் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்து வருவதோடு […]

தைத்திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் பொதுமக்களுக்கு வாழ்த்து செய்தி தெரிவித்திருக்கிறார். மேலும் சமத்துவ பொங்கல் கொண்டாட தமிழக மக்கள் அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார். சமத்துவ பொங்கல் என கோலமிட்டு அதனை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டிருக்கிறார். இதுதான் தமிழக மக்கள் எனக்கு வழங்கும் பொங்கல் பரிசு எனவும் தெரிவித்துள்ளார். மேலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கழக உடன்பிறப்புகளுக்கு கடிதம் எழுதி […]

பொங்கல் பண்டிகை தமிழகத்தில் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். இந்தப் பண்டிகையானது ஜாதி மத பேதமின்றி அனைவராலும் கொண்டாட கூடிய சமத்துவ பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் இருக்கும் பல்வேறு கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள் மற்றும் பள்ளிகளிலும் ஒவ்வொரு ஆண்டும் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகை தமிழகத்தில் ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் பண்டிகை என்பதை தாண்டி விவசாயம் செய்யும் அனைத்து மக்களாலும் கொண்டாடப்படும் ஒரு […]

மாநிலம் முழுவதிலும் செயல்பட்டு வரும் அரசு நியாய விலை கடைகளில் பாமாயில் மற்றும் துவரம் பருப்பு விநியோகத்தை நிறுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியாவில் ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் ரேஷன் கடைகளின் மூலம் அத்தியாவசியமான பொருள்கள் இலவசமாகவும் மலிவு விலையிலும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ரேஷன் கடைகளின் மூலமாக பொதுமக்களுக்கு அரசு பல உதவிகளையும் வழங்கி வருகிறது. நிவாரண நிதி மற்றும் பொங்கல் […]

திருச்சி நகரில் செல்போன் கேம் விளையாடிய நபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பதற்றத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாநகரில் அமைந்துள்ள அண்ணா நகர் பகுதியில் வசித்து வந்தவர் சதீஷ் (47). இவர் பொன்மலையில் அமைந்துள்ள ரயில்வே தொழிற்சாலையில் டெக்னீசியன் ஆக பணியாற்றி வந்தார். சதீஷ் செல்போனில் கேம் விளையாடும் பழக்கத்திற்கு அடிமையானவர் என தெரிகிறது. […]