fbpx

டாஸ்மாக் கடைகளில் குவாட்டர் ஒரு பாட்டிலுக்கு 10-20 ரூபாய் கூடுதலாகவும், பீர் பானங்கள் 20-30 ரூபாய் வசூலிப்பதாக நுகர்வோர்கள் புகார் தெரிவித்ததை தொடர்ந்து, தமிழ்நாடு மாநில விற்பனைக் கழகம் மதுபான விற்பனை நிலையங்களில் திடீர் சோதனை நடத்த சமிபத்தில் முடிவு செய்தது. பெரும்பாலான ஊழியர்கள் சிறிய அளவிலான தொகைகளை திரும்ப தருவதில்லை என்ற புகார்களும் உள்ளன. …

தமிழகம் முழுவதும் மேலும் 275 டாஸ்மாக் கடைகளை மூடுவது குறித்து அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. டாஸ்மாக் கடைகள் மூடுவது தொடர்பாக அடிக்கடி புகார்கள் வரும் பகுதிகளில் இருந்து உளவுத்துறை உள்ளீடுகளை சேகரிக்குமாறு அதிகாரிகளை அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த விற்பனை நிலையங்கள் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகாமையில் இருப்பதால் அதற்கு அருகில் வசிப்பவர்களின் எதிர்ப்பை …

தமிழகத்தில் மது பாட்டில் விலையை தமிழக அரசு உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் மது விற்பனையை அதிகரிக்கவும், மூடப்பட்ட 500 கடைகளுக்கு இழப்பீடு வழங்க ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மதுபான விற்பனை விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக மதுவின் விலை குவார்ட்டருக்கு ரூ.10 …

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு மதுக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவைத்துள்ளார்.

விநாயகர் சதுர்த்தி விழா முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இன்று முதல் அத்தனை சிலைகளும் கடலில் கரைப்பதற்காக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். இதனை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் ஊர்வலம் நடை பெறும் பகுதிகளில் …

டாஸ்மாக் விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை என்று குறைக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்திருப்பதால், மதுப்பிரியர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

தமிழகத்தில், கடந்த 2016 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக ஜெயலலிதா முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் பகல் 12 மணிக்கு திறக்கப்பட்டு, இரவு 10 …

மதுபானம் பங்கீடு செய்வதில், ஏற்பட்ட தகராறில், பிளேடால் கழுத்தை அறுத்து, 60 வயது முதியவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

காஞ்சிபுரம் பகுதியில், பிச்சை எடுத்து வரும் 60 வயது மதிக்கத்தக்க ஒரு முதியவரும், செட்டிகுளம் பகுதியில் சேர்ந்த உதயா (18) என்ற வாலிபரும் ஒன்றாக இணைந்து, மது அருந்துவது …

உரிமம் பெறாத இடங்களில் மதுபானம் விற்பனை செய்தால் சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும்.

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை ஆணையர் தனது உத்தரவில்; மதுபானங்களை விற்பனை செய்ய, தமிழக அரசால், விற்பனை உரிமங்கள் வழங்கப்படுகின்றன. அவ்வாறு உரிமம் பெறாமல், உணவகங்கள், தாபா போன்ற சிறுகடைகள் மற்றும் உரிமம் பெறாத வேறு இடங்களில், மதுபானம் விற்பனை செய்வது சட்டப்படி …

தமிழக அரசு டாஸ்மாக் மது விற்பனையின் மூலம் ஆண்டுக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டி வருகிறது. தமிழகத்தில் மொத்தம் 4,810 டாஸ்மாக் கடைகள் உள்ள நிலையில், மதுக்கடைகளில் பாட்டில் ஒன்றுக்கு கூடுதலாக பத்து ரூபாய் வசூலிப்பதாக குடிமகன்கள் புகார் தெரிவித்துள்ளனர் இதனை தடுக்கும் வகையில் மதுக்கடைகளில் ஸ்வைப்பிங் மெஷின் வைக்க டாஸ்மாக் நிர்வாகம் …

தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்க பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரம் கேட்டுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை எழுதியுள்ள கடிதத்தில்; மது இல்லாத தமிழகம் என்பது தமிழக பாரதிய ஜனதா கட்சியின் கனவு மட்டுமல்ல. தமிழக பொது மக்களின் விருப்பமும் கூட. அதனை நிறைவேற்றிட, தமிழக பாரதிய ஜனதா கட்சியானது தகுந்த ஆலோசனைகளையும், …

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் தொகை வைத்து விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவித்தது மது அருந்துவோர் மத்தியில் மகிழ்ச்சியையும், விற்பனையாளர் மத்தியில் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி கடந்த வாரம் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் . அப்போது டாஸ்மாக் கடைகளில் …