fbpx

ரேஷன் கடைகளில் கோதுமைக்கு தட்டுப்பாடு வந்துவிடுமோ என்ற லேசான கலக்கம் சூழ்ந்து வந்த நிலையில், தற்போது மகிழ்ச்சி தகவல் ஒன்றை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது. இப்படியொரு அறிவிப்பு வந்திருப்பது, ரேஷன் அட்டைதாரர்களுக்கும் நம்பிக்கையை தந்து கொண்டிருக்கிறது.

கோதுமை ஒதுக்கீட்டை பொறுத்தவரை, தமிழகத்துக்கு 1,038 டன்னாக இருந்த அளவினை மத்திய அரசு, கடந்த வருடம் திடீரென குறைத்துவிட்டது. …

அனைத்து மகளிருக்கும் ரூ.1000 உரிமைத் தொகை என்பது திமுகவின் தோல்வி பயத்தின் வெளிப்பாடு என பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார்.

தமிழ்நாட்டில் குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைத்து குடும்பங்களின் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வரும் ஜனவரி மாதம் முதல் வழங்கப்படும் என்று வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அறிவித்துள்ளார். அனைத்து …

மெத்தனால் போன்றவை தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்கும் பொருட்டும் தமிழ்நாடு அரசு மாவட்ட அளவில் குழு அமைத்துள்ளது .

மெத்தனால் மற்றும் இதர கரைப்பான்கள் ஆகியவற்றின் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாடு ஆகியவற்றை முறைப்படுத்தும் பொருட்டும், தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்கும் பொருட்டும் தமிழ்நாடு அரசு அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலான குழுவினை அமைத்துள்ளது. …

10 ஆயிரம் போலி ஆசிரியர்களைக் கொண்டு மாணவர்களுக்கு கற்பித்தல் பணிகள் எதுவும் நடைபெறவில்லை என பள்ளி கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்டம் அரூர் கல்வி மாவட்டத்தில் காரிமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ராமியாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்த கே.பாலாஜி தனக்கு …

நவம்பர் 15 பவுர்ணமி, அதைத் தொடர்ந்து நவ.16, 17 வார இறுதி நாட்கள் என தொடர் விடுமுறை முன்னிட்டு சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

நவம்பர் 15 பவுர்ணமி, அதைத் தொடர்ந்து நவ.16, 17 வார இறுதி நாட்கள் என தொடர் விடுமுறை வருகின்றன. இதை கருத்தில் கொண்டு, …

சென்னையில் மாமூல் தர மறுத்த பெண் வியாபாரி வெட்டிக் கொலை. மதுரை திருமங்கலத்தில் திமுகவைச் சேர்ந்தவர்களால் இனிப்புக் கடை சூறையாடப்பட்டுள்ளது. திமுக அரசின் சட்டம் ஒழுங்கு லட்சனம் இதுதானா என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: சென்னை திருவொற்றியூரில் பழக்கடை நடத்தி வந்த கவுரி என்ற பெண் …

நவம்பர் 15 பௌர்ணமி மற்றும் 16 சனி, 17 ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவித்திருக்கிறது. நவம்பர் 15ஆம் தேதி கிளாம்பக்கத்தில் இருந்து 460 பேருந்துகளும், 16ஆம் தேதி 245 பேருந்துகளும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்,” 15/11/2024 (வெள்ளிக் கிழமை) பௌர்ணமி, …

வரும் 27 முதல் 23-ம் தேதி வரை தமிழக அரசு சார்பில் ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பான வழங்கப்பட உள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் ஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகளையும், சட்டதிட்டங்ககளையும் குறித்த 3 நாட்கள் பயிற்சி வரும் 21.11.2024 முதல் …

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்படி, மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் ராஜேஷ் லக்கானி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோயம்புத்தூர், …

தமிழக காவல்துறையை சுதந்திரமாக அரசு செயல்பட விட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை அண்ணாநகரில் 10 வயது சிறுமி தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் சென்னை மாநகர காவல்துறையின் செயல்பாடுகளை கடுமையாக கண்டித்திருக்கும் உச்சநீதிமன்றம், அந்த வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழுவை அமைக்கப் போவதாக அறிவித்திருக்கிறது. அதற்காக தமிழ்நாடு …