தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரத்தைக் கட்டுப்படுத்த முடியாத திமுக அரசு பதவி விலக வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி செயலாளர் வழக்கறிஞர் சக்கரவர்த்தியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பாட்டாளி மக்கள் கட்சியினர் குற்றம்சாட்டி வந்த நிலையில், அவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று அவரது உடற்கூறு ஆய்வில் […]
tn government
மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்குவது சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில்; பள்ளிக்கல்வி இயக்கக கட்டுப்பாட்டின் கீழ் வரும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்கும் பொருட்டு EMIS தொழில்நுட்ப குழுவால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணியினை விரைந்து முடிக்கும் பொருட்டு EMIS App இல் […]
முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ்,சென்னை மாவட்டத்தில் 2 பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தில் பதிவு செய்த பயனாளிகளுக்கு முதிர்வுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான விண்ணப்பம் அளிக்காதவர்கள் வைப்புத்தொகை பத்திரம், வங்கிக் கணக்கு விவரம் (தனி கணக்கு), 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்று ஆகிய ஆவணங்களுடன் சென்னை மாவட்ட சமூகநல அலுவலகத்தை அணுகலாம். முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், பெண் குழந்தைகளின் நலனுக்கான முன்னோடி மற்றும் […]
தமிழகம் முழுவதும் ஒருங்கிணைந்த குரூப்-1, குரூப்-1 ஏ முதல்நிலைத்தேர்வு இன்று (ஜூன் 15) நடைபெறுகிறது. துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளில் 70 காலியிடங்களையும், உதவி வனப்பாதுகாவலர் பதவியில் 2 காலியிடங்களையும் நிரப்பும் வகையில் ஒருங்கிணைந்த குரூப்-1, குரூப்-1 ஏ முதல்நிலைத்தேர்வு இன்று (ஜூன் 15) நடைபெறுகிறது. இத்தேர்வை தமிழகம் முழுவதும் 44 தேர்வு மையங்களில் 2,49,296 பேர் எழுதுகின்றனர். தமிழகத்தின் 38 மாவட்டங்கள் மற்றும் 6 தாலுகாக்கள் என […]
நடப்பு கல்வியாண்டில் மொத்தம் 210 நாட்கள் பள்ளிகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 2026 ஏப்ரல் 10-ம் தேதி முழு ஆண்டு தேர்வு தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து அனைத்து பள்ளிகளும் கடந்த ஜூன் 2-ம் தேதி திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நடப்பு கல்வி ஆண்டுக்கான வருடாந்திர நாள்காட்டியை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டது. அதில், இந்த கல்வி ஆண்டுக்கான பள்ளி வேலை நாட்கள் […]
அரசு அலுவலகங்களுக்கு வரும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக பதிவேடு ஒன்றை பராமரிக்க அலுவலர்களுக்கு தமிழக தமிழக உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்; அரசு அலுவலகங்களில் நேரடியாக மற்றும் மின்னஞ்சல் வாயிலாகப் பெறப்படும் குறைகளைவு மனுக்களின் பரிசீலனை குறித்து மாற்றியமைக்கப்பட்ட நடைமுறைகள் வெளியிடப்பட்டன அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட நடைமுறைகளின்படி மூன்று (3) நாட்களுக்குள் மனுவைப் பெற்றுக் […]
மின்வாரிய தொழில்நுட்ப உதவியாளர் உள்பட பல்வேறு பதவிகளில் 1,910 காலியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணி தேர்வு நடத்தப்பட இருப்பதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தில் உள்ள தொழில்நுட்ப உதவியாளர் (எலெக்ட்ரிக்கல்) உள்பட 58 விதமான பதவிகளில் 1,910 காலி்யிடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு (ஐடிஐ மற்றம் டிப்ளமா கல்வித் தகுதி உடைய பதவிகள்) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு ஜூலை 12-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் […]
காவல்துறையில் தலைமை காவலர், எஸ்.எஸ்.ஐ ஆகிய பதவிகளின் பதவி உயர்வுக்கான பணிக்கால வரம்பு குறைக்கப்பட்டுள்ளது. முன்பு, 2ஆம் நிலை காவலர் 10 வருடமும், முதல் நிலை காவலர் 5 வருடமும் பணியாற்றினால் தலைமை காவலராக பதவி உயர்வு பெறுவர். ஆனால், தற்போது, முதல் நிலை காவலர் 3 வருடம் பணிபுரிந்தாலே, தலைமைக் காவலராக பதவி உயர்வு பெறுவார். இதையடுத்து, தலைமை காவலர் 10 வருடம் பணிபுரிந்தால் சிறப்பு சார்பு ஆய்வாளராகவும் […]
மேட்டூர் அணை திறக்கப்பட்ட பிறகும் குறுவைத் தொகுப்பு அறிவிக்காதது ஏன்…? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் தனது அறிக்கையில்; காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், குறுவை சாகுபடிக்கான குறுவைத் தொகுப்புத் திட்டம் இன்று வரை அறிவிக்கப்படவில்லை; நெல்லுக்கு முதலமைச்சர் அறிவித்துள்ள கொள்முதல் விலையும் உழவர்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. […]
சேலம் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபின மாணவ மற்றும் மாணவிகளுக்கான விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசால் சேலம் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபின மாணவர் மற்றும் மாணவிகளுக்கென 28 பள்ளி மாணவர் விடுதிகள், 9 பள்ளி மாணவி விடுதிகள் என 37 மாணவ, மாணவிகளுக்கான பள்ளி விடுதிகளும், 5 கல்லூரி மாணவர்கள், 6 கல்லூரி மாணவிகள் என […]