மகளிர் உரிமைத் தொகை.. இந்த சின்ன தவறை செய்தால் ஒரு ரூபாய் கூட கிடைக்காது..!! கவனம் மக்களே..

magalir thoga3 1694054771 down 1750124150 1

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என்பது தமிழக அரசால் செயல்படுத்தப்படும் ஒரு முக்கியமான நலத்திட்டமாகும். 2023 ஆம் ஆண்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். இதன் மூலம் கோடிக்கணக்கான பெண்கள் பயனடைந்து வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி ரூ.1000 பணம் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.


அதேசமயம் தகுதியான விடுபட்ட பெண்களுக்கும் உரிமை தொகை வழங்கப்படும் என கடந்த சட்ட சபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி விண்ணப்பம் செய்வதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகின்றது. இதனைத் தொடர்ந்து மகளிர் உரிமைத்தொகை திட்ட விரிவாக்கம் தொடங்கியது.

கடந்த முறை மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பிக்கலாம் எனக் கூறப்பட்டது. மேலும் குடும்ப தலைவி மட்டுமே இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க வேண்டியது இல்லை என்றும், ஒரு குடும்பத்தில் தாய் இறந்துவிட்ட நிலையில், அந்த குடும்பத்தில் இருக்கும் 21 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் மகளிர் உரிமைத்தொகை குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கும் போது, மொபைல் எண், வங்கிக் கணக்கு எண் ஆகியவற்றை மாற்றிக் கொடுப்பது, தவறுதலாக ஒரு எண் மாறுவது ஆகியவற்றால் கூட மகளிர் உதவித் தொகை கிடைக்காமல் போகலாம். தொலைபேசி எண்ணை சரியாக கொடுத்து வங்கி கணக்கு எண்ணை தவறாக கொடுத்தால் மெசேஜ் வரும்.

ஆனால் பணம் வராது. இ சேவை மையங்கள் மூலமோ அல்லது உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலமும் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கும் போது ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருக்கிறதா? மொபைல் எண். வங்கி கணக்கு எண், ஐஎஃப்எஸ்சி கோட் உள்ளிட்டவை சரியாக இருக்கிறதா என ஆராய்ந்த பிறகு விண்ணப்பிக்க வேண்டும்.

Read more: அரசுப் பள்ளி ப்யூச்சர் ரெடி’ வினாக்கள் மூலம் மாணவர்களுக்கு மாதம்தோறும் தேர்வு…!

English Summary

Women’s rights amount.. If you make this mistake, you won’t get the money..!! Attention people..

Next Post

இந்த நாடுகளில் ஜனநாயகம் வேலை செய்யாது! ராணுவம் எந்த நேரத்திலும் ஆட்சியை கவிழ்க்கலாம்! இது அதிகமாக எங்கே நடந்தது?

Sat Sep 20 , 2025
உலகில் பெரும்பாலான நாடுகள் ஜனநாயக முறை அரசாங்கத்தையே நடத்தி வருகின்றன.. ஆனால் பொதுமக்கள் அரசாங்கத்தின் மீதான எப்போது இழக்கின்றனரோ, ராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றும் திறன் கொண்டதாக நம்புகின்றனர் அப்போது தான் எந்தவொரு ஜனநாயகம் அல்லது அரசியல் அமைப்பிற்கும் மிகப்பெரிய சவால் எழுகிறது. இதுபோன்ற அசாராண சூழலில் ஆட்சிக் கவிழ்ப்புகள் நடைபெறுகின்றனர்.. அரசியல் ஸ்திரமின்மை, மோசமான பொருளாதார நிலைமைகள், ஊழல் மற்றும் பொதுமக்களின் அதிருப்தி ஆகியவை இதில் பெரும்பாலும் பங்கு வகிக்கின்றன. […]
download

You May Like