fbpx

மாணவர்களின் பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்படுத்தும் மரங்கள், மரக்கிளைகளை வெட்டி அகற்ற வேண்டும்.

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கான அறிவுரைகளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளிலும் இந்த அறிவுரைகளை பின்பற்றுதல் அவசியம், அவற்றை உரிய அதிகாரிகள் பார்வையிட …

சேலம் மாவட்டத்தில், தமிழ் வளர்ச்சித்துறையால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டிகள் நடத்தப்படவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில்; தமிழ் வளர்ச்சித் துறையின் 2021-22ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார். பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் …

தமிழகம் முழுவதும் நாளை காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கான காலாண்டுத் தேர்வு விடுமுறை இன்றுடன் முடிவடைய உள்ளது. அக்டோபர் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், காலாண்டு விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் அக்டோபர் 7ம் தேதி திங்கள்கிழமை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே …

அரசுப் பள்ளிகளில் மாணவர் குழு அமைப்பினை ‘மகிழ் முற்றம்’ என்ற பெயரில் நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட சுற்றறிக்கையில்; தமிழகத்தில் அனைத்து விதமான பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களிடம் தலைமைப் பண்பை வளர்க்கும் வகையில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனும் பெயர்களில் மாணவர் குழுக்கள் அமைத்து மாணவர் தலைவர் …

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை மூலம் செயல்படுத்தப்படும் ஒருகால பூசைத் திட்ட திருக்கோயில்களில் பணிபுரிந்து வரும் அர்ச்சகர்களின் மகன் மற்றும் மகள்களின் மேற்படிப்பிற்கான கல்வித் உதவித்தொகையாக 500 மாணவர்களுக்கு மொத்தம் 50 இலட்சம் ரூபாய் வழங்கிடும் அடையாளமாக 10 மாணவர்களுக்கு தலா ரூ.10,000/-க்கான வங்கி வரைவோலைகளை வழங்கினார்.

இந்து …

மதுவை ஒழிக்க முடியாது எனில் தோல்வியை ஒப்புக்கொண்டு தமிழக அரசு பதவி விலக வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் தனது அறிக்கையில்; தமிழ்நாட்டில் மதுவை ஒழிக்க மாநில அரசால் முடியாது; நாடு முழுவதும் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த சட்டம் கொண்டு வரப்பட்டால் மட்டும் தான் மதுவிலக்கு சாத்தியமாகும் என்று சட்டத்துறை அமைச்சர் …

மழை பாதிப்பு குறித்த புகார்களுக்கு உடனடியாக தீர்வு காண அரசு அலுவலர்களுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்..

சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தின் செயல்பாடுகள் குறித்து, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். ஆய்வின்போது, 24 மணி நேரமும் இயங்கி வரும் அவசர அழைப்பு …

தருமபுரியில் இன்று இலவச வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில், தருமபுரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இம்முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கிசேவைகள். …

மின் கட்டணம் செலுத்த தமிழ்நாடு மின்சார வாரியம் புதிய விதியை இன்று முதல் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, ரூ 4 ஆயிரத்திற்கு மேல் உள்ள மின் கட்டணத்தை இனி ரொக்கமாக கவுன்ட்டர்களில் செலுத்த முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் மின் நுகர்வோர்கள் எண்ணிக்கை 3 கோடியே 32 லட்சமாக உள்ளது. வீடு மற்றும் அலுவலகங்களில் இரண்டு மாதங்களுக்கு …

அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு திங்கள் தோறும் ரூ.3500 உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாகச் சீரிளமைத் திறம் கொண்ட அன்னைத் தமிழுக்கு அருந்தொண்டாற்றி வரும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகிறது. முதுமைக்காலத்திலும் பொருள் …