தமிழகத்தில் 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை யொட்டிய மியான்மார் கடலோரப் பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றது. இது, வடகிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் – மியான்மார் கடலோரப் பகுதிகளில் நிலவுகிறது. […]

திருச்சியில் உள்ள இந்திய மேலாண்மைக்கழகம் தனது சென்னை வளாகத்தில் பகுதி நேர முதுநிலை வணிக மேலாண்மை (எம்பிஏ) பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கையை தொடங்கியுள்ளது. திருச்சியில் உள்ள இந்திய மேலாண்மைக்கழகம் தனது சென்னை வளாகத்தில் பகுதி நேர முதுநிலை வணிக மேலாண்மை (எம்பிஏ) பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கையை தொடங்கியுள்ளது.இந்த 21 மாதகால பகுதி நேர படிப்பில் சேரும் பணிபுரிவோர் மற்றும் தொழில்முனைவோரின் வசதிக்காக வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வகுப்புகள் […]

திருச்சி அருகே காட்டுப்பன்றி தாக்கியதில் மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் கிளிக்கூடு, உத்தமர்சீலி, பனையபுரம், திருவளர்சோலை உள்ளிட்ட பகுதிகளில் நெல், வாழை, கரும்பு பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருகின்றன. இந்நிலையில், கடந்த 11-ம் தேதி கவுத்தரசநல்லூர் பகுதியில் கொய்யா தோப்புக்குள் நுழைந்த காட்டுப்பன்றி, அங்கிருந்த விவசாயி சகாதேவனை(45) கடித்துக் குதறியது. இதில் பலத்த காயமடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று […]

டி.என்.பி.எல். தொடரின் 23-வது லீக் போட்டி திருநெல்வேலியில் நடந்து வருகிறது. இதில் திருச்சி கிராண்ட் சோழாஸ், மதுரை பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, மதுரை அணி முதலில் களமிறங்கியது. திருச்சி அணியின் துல்லிய பந்துவீச்சினால் மதுரை அணி முன்னணி வீரர்களை இழந்து தத்தளித்தது. அந்த அணி 29 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது. 6-வது விக்கெட்டுக்கு […]

திருச்சி ஜீயபுரம் அருகே நடந்த சாலை விபத்தில் முசிறி கோட்டாட்சியர் ஆரமுது தேவசேனா உயிரிழந்தார். திருச்சி – கரூர் நெடுஞ்சாலையில் வாகனத்தில் சென்ற போது ஜீப் டயர் வெடித்ததால், வாகனம் நிலைகுலைந்து எதிரே வந்த அரசு பேருந்து மீது விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் பலத்த காயமடைந்த கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிந்தார். அரசு பணிக்காக ஜீப்பில் சென்ற போது கோட்டாட்சியர் விபத்தில் சிக்கிய […]

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் வாசலில் தூங்கிக் கொண்டிருந்த பக்தர் மீது கார் ஏறி விபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதிதாக கார் வாங்கிய நபர் பூஜைக்காக சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு சென்றிருந்தார். அந்த காரை முன்னே நகர்த்தியபோது கட்டுப்பாட்டை மீறி வேகமாக சென்றதாக கூறப்படுகிறது. இதனால் கோயில் வாசலில் தூங்கி கொண்டிருந்த நபர் மீது கார் ஏறி இறங்கியது. பக்தரின் தலையில் கார் ஏறியதில் தலை நசுங்கி […]