உத்தரபிரதேசத்தில் ரயில் நிலையத்தில் பிரசவ வழியால் துடித்துக் கொண்டிருந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு, பிரசவம் பார்த்த ராணுவ மருத்துவருக்கு ராணுவ தளபதி உபேந்திரா திவேதி பாராட்டு தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் பன்வேல்-கோரக்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்த கர்ப்பிணிப் பெண், ஜான்சி நிலையத்தில் இறக்கியபோது, அவருக்குப் பிரசவ வலி ஏற்பட்டது. இதை அறிந்த மேஜர் பச்வாலா உடனடியாகச் செயல்பட்டு, ரெயில்வே ஊழியர்களின் உதவியுடன் நடைமேடையிலேயே பிரசவம் பார்க்க முடிவு செய்தார். […]

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டம் குமாரியா கிராமத்தை சேர்ந்தவர் 54 வயதான சுஷிலா தேவி. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். போலீசார் விசாரணையில் பல அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சுஷிலா தேவியின் இளைய மருமகள் பூஜா, அவளது சகோதரி கமலா மற்றும் கமலாவின் காதலர் அனில் வெர்மா ஆகியோர் […]

உத்தரப்பிரதேசத்தில் சாக்கடையில் விழுந்த நாய்க்குட்டியை காப்பாற்றியபோது எதிர்பாராதவிதமாக கடித்ததை அலட்சியமாக விட்டதால் கபடி வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷஹரில் உள்ள ஃபரானா கிராமத்தைச் சேர்ந்தவர் பிரிஜேஷ் சோலங்கி, கபடி வீரரான இவர், மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றுவருகிறார். இந்தநிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, அதாவது மார்ச் மாதத்தில் அவரது கிராமத்தில் சாக்கடையில் விழுந்த நாய்க்குட்டியை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராத […]

பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியின் கடைகளில் இருந்து சமோசாக்களை லஞ்சமாக வாங்கி கொண்டு வழக்கை முடித்து வைத்ததாக சிறுமியின் தந்தை மனுதாக்கல். கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ந்தேதி அன்று 14 வயது சிறுமி ஒருவர் பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த வீரேஷ் என்பவர் சிறுமியை பக்கத்தில் உள்ள வயலுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து […]

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள கட்கா கிராமத்தில், வானில் இருந்து வயலில் மேகம் விழுவது போன்ற விசித்திரமான வீடியோ வெளியாகி சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பருவநிலை மாறுபாடு காரணமாக இதுபோன்ற பல்வேறு இயற்கை நிகழ்வுகள் ஆங்காங்கே ஏற்பட்டு வருகிறது. இதுதொடர்பாக விஞ்ஞானிகளும் தொடர்ந்து ஆராய்ச்சி செய்துவருகின்றனர். மிக அரிய நிகழ்வு என்ற போதிலும், இதுபோன்ற சில வீடியோக்கள் உண்மையா என்றும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்தநிலையில், உத்தரபிரதேச […]

இந்திய அரசியலமைப்பின் பிரிவு 326 இன் கீழ், அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும், நாட்டில் பல்வேறு நிலைகளில் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. இருப்பினும், அவசரநிலை ஏற்பட்டால், தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல்களையும் நடத்துகிறது. தேர்தல்களின் போது, ​​பல இடங்களில், மக்கள் தேர்தலைப் புறக்கணித்து, தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமலும், வளர்ச்சிப் பணிகள் செய்யப்படாமலும் இருந்தால் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்கிறார்கள். சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகளுக்குப் பிறகும், உத்தரகண்டில் ஒரு […]

காதலனுடன் ஹோட்டலில் தங்கியிருந்த ஒரு பெண், திடீரென கணவரும் மாமியாரும் போலீசாருடன் வந்ததை பார்த்ததும் ஹோட்டல் சுவரில் இருந்து குதிக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீவிரமாக வைரலாகி வருகிறது. உத்தர பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தின் பராத் பகுதியில் உள்ள ஒரு OYO ஹோட்டலில் அந்த பெண் தனது கள்ள காதலனுடன் தங்கியிருந்தார் என கூறப்படுகிறது. தகவல் அறிந்த பெண்ணின் கணவர் குடும்பம் போலீசாருடன் ஹோட்டல் அறைக்கு வந்தனர். […]

உத்தரப்பிரதேசத்தில் நடந்த கும்பமேளா விழாவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் உயிரிழந்த சம்பவம், நாட்டையே பாதித்தது. ஆனால் அதைவிட வேதனையை அளிப்பது, அந்த உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இன்னும் இழப்பீடு வழங்கப்படாதது என்ற செய்திதான். உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா நடைபெற்றது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த நிகழ்வு ஜனவரி 12ஆம் தேதி […]

உத்தரப் பிரதேசத்தில் லட்டில் போதை மாத்திரை கலந்து கொடுத்து தடகள வீராங்கனையை ஆசிரம சாமியார் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் கோவிந்த் நகர் பகுதியில் உள்ள ஒரு ஆசிரமத்தில் 30 வயது தேசிய அளவிலான டேக்வாண்டோ தடகள வீராங்கனை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. புகாரின்படி, அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு முதியவர், ஆசிரமத்தில் ஒரு கடை அமைக்க […]