சரியான நேரத்தில் தலையிடாவிட்டால், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஒரு போர் வெடித்திருக்கும் என்று கூறினார். வர்த்தக பேச்சுவார்த்தைகளை நிறுத்துமாறு இரு நாடுகளையும் மிரட்டியதாகவும், இதனால் போர் தவிர்க்கப்பட்டதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். ஸ்காட்லாந்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், இந்தியா-பாகிஸ்தான் உட்பட உலகில் ஆறு பெரிய போர்களை நிறுத்த தாம் பாடுபட்டதாக டிரம்ப் கூறினார். இந்தியா-பாகிஸ்தான் இரண்டும் அணு ஆயுத நாடுகள் என்பதால் அவற்றை “மிகப்பெரிய ஹாட்ஸ்பாட்” என்று […]

கம்போடியாவிற்கும் தாய்லாந்திற்கும் இடையே நடந்து வரும் போர், சமீபத்திய இந்தியா-பாகிஸ்தான் மோதலை நினைவூட்டுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். இதுதொடர்பாக, ‘ட்ரூத் சோஷியலில் பதிவிட்டுள்ள அதிபர் டிரம்ப், இரு தரப்பினரும் அனைத்து விரோதங்களையும் நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும் தற்போதைய மோதலை முடிவுக்குக் கொண்டுவராவிட்டால், தாய்லாந்து அல்லது கம்போடியாவுடன் எந்த வர்த்தக ஒப்பந்தத்தையும் செய்ய மாட்டேன் என்று எச்சரிக்கைவிடுத்துள்ளார். கம்போடிய பிரதமர் ஹன் மானெட்டுடன் தொலைபேசியில் உரையாடியதாக […]

கம்போடியாவுடனான மோதல்கள் அதிகரித்து வருவதால், தாய்லாந்து எட்டு எல்லை மாவட்டங்களில் அவசரகால நிலையை அறிவித்து, இராணுவச் சட்டத்தை அமல்படுத்தியுள்ளது, மோதல்கள் அதிகரிக்கும் போது குடிமக்கள் பயணத்தைத் தவிர்க்கவும், விழிப்புடன் இருக்கவும், அதிகாரப்பூர்வ பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தாய்லாந்துக்கும் கம்போடியாவிற்கும் இடையிலான சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில் பல வாரங்களாக நீடித்த மோதலுக்குப் பிறகு வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது பதினொரு தாய்லாந்து பொதுமக்களும் ஒரு சிப்பாயும் கொல்லப்பட்டனர். இதை […]

ஜூன் 13 ஆம் தேதி தொடங்கிய இஸ்ரேல்-ஈரான் மோதல்களில், 610 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் என்றும், 4,700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்றும் ஈரான் சுகாதார அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத் துறை செய்தித் தொடர்பாளர் ஹொசைன் கெர்மன்பூர், “கடந்த 13ம் தேதி முதல் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் மோதல்கள் தொடர்ந்த் நடைபெற்று வருகின்றன. இந்த தாக்குதல்களின் காரணமாக 610 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 49 பெண்களும், […]

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே கடுமையான போர் நடந்து வருகிறது. இரு நாடுகளும் ஒன்றையொன்று தாக்கிக் கொள்கின்றன. அமெரிக்காவும் இந்தப் போரில் நுழைவது பற்றிப் பேசி வருகிறது. அமெரிக்கா இஸ்ரேலை ஆதரிக்கிறது, மேலும் இது தொடர்பாக அமெரிக்காவும் வெள்ளை மாளிகையில் ஒரு கூட்டத்தை நடத்தியது. ஈரானின் இராணுவம் மற்றும் அணுசக்தி திட்டத்திற்கு எதிரான இஸ்ரேலின் பிரச்சாரத்தில் சேருவதா இல்லையா என்பதை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இரண்டு வாரங்களுக்குள் முடிவு செய்வார் […]

உணவுக்காக காத்திருந்த காசா மக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் 34 பேர் உயிரிழந்தனர். 2023 அக்டோபரில் தொடங்கிய இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர், உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து சுமார் ஒரு ஆண்டுக்குப்பிறகு, 2024 ஜனவரியில் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் முயற்சியால் போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது. மூன்று கட்டங்களாக திட்டமிடப்பட்ட இந்த ஒப்பந்தத்தில், இரு தரப்பும் தங்களிடம் உள்ள […]

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் ஈரானில் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 406 ஐ எட்டியுள்ளது. ஈரான் – இஸ்ரேல் இடையே தற்போது போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இரண்டு மத்திய கிழக்கு நாடுகளும் பல வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இஸ்ரேலிய ஆயுதப் படைகள் ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற திட்டத்தின் கீழ் ஈரானின் அணுசக்தி மற்றும் இராணுவ தளங்களைத் தாக்கியதைத் தொடர்ந்து பதற்றம் அதிகரித்துள்ளது. குறிப்பாக ஈரான் தலைநகர் டெஹ்ரான் மற்றும் […]