“ஒழுங்கா டிரெஸ்ஸை கழட்டு”.. மருத்துவமனைக்கு வந்த பெண்ணிடம் மருத்துவர் செய்த அத்துமீறல்!

fa0827ef45eeb933625d151b602f08071f7ddfee06e1b7a1ae246240d415fadd

மருத்துவமனைக்குச் செல்லும் பெண்களுக்கே பாதுகாப்பு இல்லையா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது அசாம் மாநிலம் குவகாத்தியில் நடந்த சம்பவம். தனது மருமகனின் மருத்துவ அறிக்கையைக் காட்டுவதற்காகச் சென்ற பெண்ணிடம், பரிசோதனை என்ற பெயரில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக மருத்துவர் ஒருவர் மீது புகார் எழுந்துள்ளது.


குவகாத்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. மருத்துவ அறிக்கையைக் காட்டச் சென்ற பெண்ணுடன் வந்த உறவினரை மருத்துவர் முதலில் வெளியே அனுப்பியுள்ளார். பின்னர், அந்தப் பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் காதல் உறவுகள் குறித்துத் தொடர்பில்லாத கேள்விகளைக் கேட்டுள்ளார்.

மருத்துவர் என்பதால் ஆரம்பத்தில் அவரது அறிவுறுத்தல்களை நம்பிய அந்தப் பெண், பரிசோதனைக்கு ஒத்துழைத்துள்ளார். ஆனால், ஆடைகளைக் கழற்றுமாறு மருத்துவர் வற்புறுத்தியதுடன், தனது அனுமதியின்றித் தகாத முறையில் தொட்டதாகவும் அந்தப் பெண் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சம்பந்தப்பட்ட மருத்துவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நோயாளிகளின் பாதுகாப்பையும் மருத்துவர்களின் பொறுப்பையும் கேள்விக்குள்ளாக்கியுள்ள இந்தச் சம்பவத்தில், காவல்துறை விசாரணையின் முடிவில் முழுமையான விவரங்கள் தெரியவரும்.

Also Read: திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியா? உடைத்த திருமாவளவன்! அதிர்ச்சியில் முதல்வர் விஜய்!

Saranya

You May Like