கூண்டோடு தவெகவில் இணைந்த நிர்வாகிகள்.. துண்டு துண்டாக உடையும் அதிமுக..! பேரதிர்ச்சியில் இபிஎஸ்..!

tvk admk n

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பினர் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், எஸ்.பி. வேலுமணி – சி.வி சண்முகம் தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டது.. இதையடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தை சுமூக முடிவு எட்டப்பட்ட நிலையில் எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அணி இபிஎஸ் அணியில் இணைந்து ஒரே அணியாக செயல்பட தொடங்கி உள்ளனர்.. எனினும் சி.வி. சண்முகம் மட்டும் இபிஎஸ் உடன் இணையவில்லை.. அவருடன் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது..


இதனிடையே மதுராந்தகம், பெருந்துரை, தாராபுரம், அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர்.. சி.வி. சண்முகமும் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.. அதிமுக நிர்வாகிகள் பலரும் தவெகவில் இணைய உள்ளதாக கூறப்பட்டது..

இந்த நிலையில் அதிமுக தொழிற்சங்க நிர்வாகிகள் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைந்தனர்.. சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் அண்ணா தொழிற்சங்க பேரவை நிர்வாகி கமலக்கண்ணன் தலைமையில் தவெகவில் தங்களை இணைத்துக்கொண்டனர்..

அதிமுக தொழிற்சங்கத்தில் போக்குவரத்து, டாஸ்மாக், மின் துறை, நெய்வேலி என்.எல்.சி என 17 பிரிவுகள் உள்ளன.. பெரும்பாலான துறைகளில் அண்ணா தொழிற்சங்க தவிர்க்க முடியாததாக உள்ளது. தமிழகத்தில் இருக்கும் மிகப்பெரிய தொழிற்சங்கங்களில் ஒன்று அண்ணா தொழிற்சங்கம்.. இந்த தொழிற்சங்கத்தில் 5,42,000 உறுப்பினர்கள் உள்ளனர்..

இந்த தொழிற்சங்கத்தில் மிகுந்த செல்வாக்கு கொண்டவர் கமலகண்ணன்.. இவரின் செல்வாக்கின் மூலம் தவெக தொழிற்சங்கத்தை வலுவாக்க தவெக தலைமை திட்டமிடுகிறது. தற்போது தவெக ஆட்சி அமைத்தாலும் தொழிற்சங்கம் இல்லாதது பெரும் பின்னடைவாக உள்ளது.. குறிப்பாக தொழிற்சங்கங்கள் மூலம் திமுக, அதிமுக நெருக்கடி கொடுக்க வாய்ப்புள்ளது.. இந்த சூழலில் கமலகண்ணன் கட்சி மாறுவதன் மூலம் தவெக தொழிற்சங்கம் உருவாகும்.. தவெக தொழிற்சங்கத்தில் அண்ணா தொழிற்சங்க உறுப்பினர்களை இணைக்கும் பணி நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

Read More : அதிமுகவில் விழுந்த அடுத்த விக்கெட்.. முன்னாள் அமைச்சர் தவெகவில் இணைந்தார்..!

RUPA

Next Post

அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து.. முழு பெட்டியும் சாம்பலானது.. பீகாரில் பெரும் பரபரப்பு..!

Thu May 28 , 2026
பீகார் மாநிலம் மதுபானி ரயில் நிலையத்தில், ஜெயநகர்–உத்னா அந்தியோதயா விரைவு ரயிலின் காலிக் பெட்டிகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மதுபானி ரயில் நிலையத்தின் 3-வது நடைமேடையில், ரயில் பெட்டிகளை இடம் மாற்றும் (shunting) பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழுப் பெட்டியும் சாம்பலானது தீ மளமளவெனப் பரவி முழுப் பெட்டியையும் சூழ்ந்துகொண்டது; சிறிது நேரத்திலேயே அந்தப் பெட்டி முழுவதும் எரிந்து சாம்பலானது. இச்சம்பவம் அதிகாலை […]
train fire

You May Like