கவனம்.‌‌.! 10 மற்றும் 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு…!

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம்.

ஆணையர்‌, வேலைவாய்ப்பு மற்றும்‌ பயிற்சித்துறை சென்னை அவர்களின்‌ ஆணைப்படி 8ம்‌ வகுப்பு தேர்ச்சியுடன்‌ தொழிற்பயிற்சி நிலையத்தில்‌ பயிற்சி பெற்று NTC/NAC பெற்றவர்கள்‌ 10ம்‌ வகுப்பு தமிழ் மற்றும்‌ ஆங்கில மொழி பாடங்களில்‌ தேர்ச்சி பெற்றால்‌ 10ம்‌ வகுப்புக்கு இணையான சான்றிதழும்‌ 10ம்‌ வகுப்பு தேர்ச்சியுடன்‌ தொழிற்பயிற்சி நிலையத்தில்‌ பயிற்சி பெற்று NTC/NAC பெற்றவர்கள்‌.


11 மற்றும்‌ 12ம்‌ வகுப்பு தமிழ்‌ மற்றும்‌ ஆங்கில மொழி பாடங்களில்‌ தேர்ச்சி பெற்றால்‌ 12ம்‌ வகுப்புக்கு இணையான சான்றிதழும்‌ வழங்கப்படும்‌ என ஆணையிடப்பட்டதை தொடர்ந்து, அரசு தேர்வுகள்‌ இயக்ககத்தால்‌ ஆகஸ்ட்‌ 2022 ல்‌ நடத்தபெற்ற மொழித்தேர்வில்‌ தனித்தேர்வர்களாக கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ்கள்‌ பெற்றவர்கள்‌ 10ம்‌ வகுப்பு மற்றும்‌ 12ம்‌ வகுப்புக்கு இணையான சான்றிதம்‌ பெற விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பபடிவம்‌ முழு விவரங்கள்‌ அடங்கிய நிலையான வழிகாட்டுதல்படி(SOP) ஆகியவை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில்‌ வெளியிடப்பட்டுள்ளன. அதனை பின்பற்றி தருமபுரி மாவட்டத்தில்‌ உள்ள அரசினர்‌ தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில்‌ சென்றோ அல்லது தபால்‌ மூலமாகவோ 28.02.2023 தேதிக்குள்‌ உரிய விண்ணப்பத்தை சமர்பிக்க வேண்டும்‌. மேலும்‌ விவரங்களுக்கு 96886 75656, 96882 37443 தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

“ பெண்ணுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்காதது கொடுமை ஆகாது..” குடும்ப வன்முறை மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்

Tue Feb 21 , 2023
குடும்ப வன்முறை மற்றும் மனைவியை தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய குற்றச்சாட்டுகளில் இருந்து கணவர் மற்றும் அவரது உறவினர்களை மும்பை நீதிமன்றம் விடுவித்துள்ளது.. மேலும் ஒரு பெண்ணுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்காதது அவள் கொடுமைக்கு ஆளானதாக அர்த்தமல்ல என்றும் தெரிவித்துள்ளது… கடந்த 2011 அன்று மும்பையை சேர்ந்த திருமணமான பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.. இதை தொடர்ந்து 2012-ம் ஆண்டில், அப்பெண்ணின் கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினர் மீது உயிரிழந்த […]
barandbench 2021 12 3c471628 7bc5 495b 8f1c 002cc9ef603d 14

You May Like