தமிழக அரசின் சார்பில் இனி ஆண்டு தோறும் ‘இசைஞானி இளையராஜா’ பெயரில் விருது..! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!

mk Stalin illayaraja 2025

இசை​ஞானி இளை​ய​ராஜாவுக்கு ‘பாரத ரத்​னா’ விருது வழங்க வேண்​டும் என்று முதல்​வர் ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்துள்ளார்.

இளையராஜாவின் இசைப்பயணம் மற்றும் அவரது சாதனைகளை பாராட்டி, அவரை கவுரவிக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் ‘சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜாவின் பொன்விழா ஆண்டு-50 பாராட்டு விழா’ சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது. விழாவில், இளையராஜாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், நினைவுப் பரிசு வழங்கினார். விழாவில் பேசிய அவர்: ராஜா, ராஜாதி ராஜன் இந்த ராஜா. நேற்று இல்லை நாளை இல்லை எப்பவும் நீ ராஜா. இசை எனும் தேனை உலகத்துக்கே தரும் இந்த தேனிக்காரரை பாராட்ட இங்கு கூடியிருக்கிறோம். அவர் கலைத்தாய்க்கு மட்டுமின்றி, தமிழ்த்தாய்க்கும் சொந்தமானவர். அதனால்தான், தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படுகிறது.


பண்ணைபுரத்தில் இருந்து புறப்பட்ட இந்த மனிதர், திறமையும், உழைப்பும் இருந்தால், எப்பேர்ப்பட்ட உயரங்களையும் அடையலாம் என்று, அனைத்து மனிதர்களுக்கும் எடுத்துக்காட்டாக திகழ்கிறார். இவர் மொழிகள், நாடுகள், எல்லைகளைக் கடந்த ராஜா. அனைத்து மக்களுக்குமானவர். இளையராஜாவை பற்றி, வலைதளத்தில் ஒருவர் எழுதிய சில வரிகளை சொல்ல விரும்புகிறேன். இளையராஜா மட்டும் இசையமைத்திருந்தால் திருக்குறளும் – நற்றிணையும் – புறநானூறும் – குறுந்தொகையும் – ஐங்குறுநூறும் – பதிற்றுப்பத்தும் – பரிபாடலும் – சிலப்பதிகாரமும் – எங்களுக்கு மனப்பாடம் ஆகியிருக்கும் என்று எழுதியிருந்தார். நானும் இதையேதான் தமிழ் ஆர்வலராக உங்களிடம் கோரிக்கையாக வைக்கிறேன். சங்கத்தமிழுக்கு, தமிழ் இலக்கியங்களுக்கு நீங்கள் இசையமைத்து சில ஆல்பங்களை வெளியிடவேண்டும்.

இசைத்துறையில், ஆர்வத்துடன் சிறந்த இசையைப் படைக்கும் இசைக்கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக தமிழக அரசின் சார்பில், இனி ஆண்டுதோறும் ‘இசைஞானி இளையராஜா’ பெயரில் விருது வழங்கப்படும். இசைத் துறையில் பல சாதனைகள் படைத்த, பல சிகரங்களை தொட்ட இசைஞானி இளையராஜாவுக்கு இந்தியாவின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’விருது வழங்கப்பட வேண்டும் என்ற ஆவலை, உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களின் சார்பில் தெரிவிக்க விரும்புகிறேன் என்றார்.

Vignesh

Next Post

இனவெறி அட்டூழியம்!. "உன் நாட்டுக்கே திரும்பி போ"!. இங்கிலாந்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சீக்கிய பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!.

Sun Sep 14 , 2025
இங்கிலாந்தில் 20 வயதுடைய சீக்கியப் பெண் ஒருவர் இரண்டு ஆண்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இனவெறித் தாக்குதல்களுக்கும் ஆளாகி உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தாக்குதல் நடத்தியவர்கள் அந்த பெண்ணிடம் “உங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பிச் செல்லுங்கள்” என்று கூறியுள்ளது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வெளிநாட்டவர்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. இங்கிலாந்தின் ஓல்ட்பரி நகரில் உள்ள டேம் சாலை அருகே கடந்த செவ்வாய்கிழமை அன்று காலை […]
Sikh Woman Raped UK

You May Like