டாஸ்மாக் – நகராட்சி நிர்வாகத் துறையில் ரூ.1000 கோடி ஊழல்.. பிரச்சாரத்தில் கொதித்து பேசிய விஜய்..!

vijay 2

தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது.. இன்று முதல் ஏப்.6 வரை காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.. எனினும் இந்த 8 நாட்களில் 4 நாட்களே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும்.


மார்ச் 30, ஏப்ரல், 2,4, 6 ஆகிய தேதிகளில் வேட்புமனு தாக்கல் செய்யலாம். மீதமுள்ள 4 நாட்கள் அரசு விடுமுறை நாட்கள் என்பதால் அன்றைய தினங்களில் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது. அதாவது மார்ச் 31, ஏப்ரல் 1. 3, 5 ஆகிய நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது.. ஏப்ரல் 7 ஆம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யபடும். வேட்புமனுக்களை திரும்ப பெற ஏப்ரல் 9 ம் தேதி கடைசி நாளாகும். அதன் பின்னர் வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.

வேட்புமனு தாக்கலின் முதல் நாளான இன்று பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் தவெக தலைவர் விஜய் வேட்புமனு தாக்கல் செய்தார். தொடர்ந்து பெரம்பூரில் விஜய் தனது பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது பேசிய அவர், “திமுக ஆட்சியில் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. தமிழ்நாட்டில் பாட்டி வயதில் உள்ளவர்களுக்கு கூட பாதுகாப்பு இல்லை.

திமுகவினர் கொடுக்கும் பணத்தை வாக்காளர்கள் வாங்கி கொண்டு காதில் விசில் ஊதி அனுப்புங்கள். தவெக வேட்பாளர்களும் விஜயும் வேறு வேறு இல்லை. தயவு செய்து விசில் சின்னத்திற்கு ஓட்டுப் போடுங்கள். இது புரட்சி தேர்தலாக இருக்க வேண்டும்.  உங்க பிள்ளை விஜய்க்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்க..

நகராட்சி நிர்வாக துறையில் பணம் வாங்கி கொண்டு தகுதி அற்றவர்களுக்கு வேலை கொடுக்கப்படிருக்கு. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்காத திமுக அரசை தூக்கி ஏறிய வேண்டும். டாஸ்மாக்கிலும், நகராட்சி நிர்வாகத் துறையிலும் ரூ.1000 கோடி ஊழல் நடந்திருக்கு. தமிழ்நாட்டை நாம் காப்பாற்றியே ஆக வேண்டும்” என பேசினார்.

Read more: 12 டன் கிட்கேட் சாக்லேட்டுகள் திருட்டு..! லாரியுடன் திருடி கொள்ளையர்கள் கைவரிசை..!

English Summary

TASMAC – Rs. 1000 crore corruption in the municipal administration department.. Vijay spoke heatedly during the campaign..!

Next Post

DNA பரிசோதனையில் சிக்கிய மாதம்பட்டி ரங்கராஜ்.. நீதிபதி கைக்கு சென்ற ரிப்போர்ட்!

Mon Mar 30 , 2026
Madhampatti Rangaraj caught in DNA test.. Report reaches judge!
joy crizilda madhampatty rangaraj

You May Like