Holiday: இன்று தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் இயங்காது…! தமிழக அரசு அறிவிப்பு…!

tasmac 2025

தமிழக முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி உள்ளிட்ட நாட்களில் டாஸ்மாக் கடைகளை அடைப்பது வழக்கம். அதன்படி, டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான உத்தரவை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பார்கள். நாடு முழுவதும் இன்று காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இதனால் தமிழக முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.


சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே விடுத்துள்ள செய்திக்குறிப்பில், இன்று காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் சில்லறை விற்பனை மதுபான கடைகள், அதனுடன் இணைந்த மதுபான கூடங்கள், உரிமம் பெற்ற விடுதிகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மூடப்பட்டு மதுபானம் விற்பனை செய்யப்பட மாட்டாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் செயல்பாட்டில் உள்ள அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL-3, FL-3A / FL4A உரிமம் பெற்ற தனியார் ஓட்டல்களின் மதுக்கூடங்கள்/முன்னாள் படை வீரர் மது விற்பனைக் கூடம் அனைத்தும் 03.10.2025 காலை 12.00 மணி வரை மதுபானங்கள் விற்பனை இன்றி மூடி வைக்க வேண்டும். மீறி எவரேனும் செயல்பட்டாலோ அல்லது கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்டாலோ கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

உங்கள் குழந்தை கல்வியில் சிறந்து விளங்க வேண்டுமா..? விஜயதசமி நாளில் உச்சரிக்க வேண்டிய சிறப்பு மந்திரம்..!!

Thu Oct 2 , 2025
கல்வி, வீரம், செல்வம் என எத்தனை இருந்தாலும், ஒரு மனிதனின் வாழ்வில் கல்வி அறிவு என்பது மிக மிக அவசியமான ஒன்று. சரியான நேரத்தில், சரியான முறையில் ஒருவருடன் உரையாடவும் பழகவும் உதவுவது கல்வி அறிவே. இத்தகைய மகத்தான அறிவையும், அதற்கும் மேலாக சாமர்த்தியத்தையும், புத்தி கூர்மையையும் அருளும் தெய்வமாகத் திகழ்பவள் சரஸ்வதி தேவி. வித்யாதேவியின் கருணை நம் வாழ்வில் பிரகாசிக்க, அவளை வழிபடுவதற்கு மிகவும் உகந்த நாளாக விஜயதசமி […]
Saraswathi 2025

You May Like