2020-21 –ஆம் ஆண்டைவிட 2021-22-ஆம் நிதியாண்டில் வாகனங்கள் ஏற்றுமதி 35.9% அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2020-21-ம் நிதியாண்டில் மொத்தம் 41,34,047 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், 2021-22-ம் நிதியாண்டில், 56,17,246 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது 35.9% உயர்வாகும். இதில் கார்களைப் பொறுத்தவரையில் 2020-21-ம் நிதியாண்டில் 4,04,394 என்ற எண்ணிக்கையில் ஏற்றுமதி செய்யப்பட்டன. 2021-22-ம் நிதியாண்டில், 5,27,875 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டதன் மூலம் கார்களின் ஏற்றுமதி 42.9% அதிகரித்த வணிக வாகனங்களின் ஏற்றுமதி 50,334-லிருந்து 92,297 ஆக அதிகரித்ததன் மூலம் 83.36% உயர்வை எட்டியுள்ளது.
இருசக்கர வாகனங்களின் ஏற்றுமதி முந்தைய நிதியாண்டில் 32,82,786ஆக இருந்தது. கடந்த நிதியாண்டில் இது 44,43,018 ஆக அதிகரித்தது. இது 35.3% உயர்வாகும். வணிக வாகனங்கள், 3 சக்கர வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களின் ஏற்றுமதியும் கடந்த நிதியாண்டில் அதிகரித்துள்ளது.
வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை 31-03-2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதிக்கு முந்தைய மற்றும் பிந்தைய ரூபாய் ஏற்றுமதி கடன் மீதான வட்டி சமன்படுத்தும் திட்டமும் 31-03-2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதித் திட்டத்திற்கான வர்த்தக உள்கட்டமைப்பு (TIES) மற்றும் சந்தை அணுகல் முன்முயற்சிகள் (MAI) திட்டம் போன்ற பல திட்டங்களின் மூலம் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் உதவி வழங்கப்படுகிறது.