தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் கொடூரக் கொலைகள் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. அதுபோன்ற ஒரு சம்பவம் தென்காசி மாவட்டத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பேச்சியம்மாள்(30). இவரது கணவர் கோவையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். அப்போது எதிர் வீட்டில் வசிக்கும் மாமன் மகன் மாடசாமியுடன் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தாக கூறப்படுகிறது.
இதுகுறித்து இருவரின் குடும்பத்தினருக்கும் தெரிய வரவே மாடசாமியின் தாய் கண்டித்துள்ளார். அதே சமயம் பேச்சியம்மாளின் கணவர் அதை கவனிக்காமல் விட்டுவிட்டார். அதன் பின்னர், மாடசாமி, பேச்சியம்மாளிடம் “குடும்பத்தை விட்டு தன்னுடன் வந்து விடு” என வற்புறுத்தினார். ஆனால் பேச்சியம்மாள் மறுத்ததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
இது சம்மந்தமாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகறாரு ஏற்பட்டுள்ளது. ஒரு நாள் வீட்டில் இருவரும் மட்டும் இருந்தபோது மீண்டும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த பேச்சியம்மாள் மாடசாமியை நாற்காலியில் கட்டி, தலையணையால் அமுத்தி, கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் சம்பவத்தை மறைக்க, பேச்சியம்மாள் தனது தாய் மாரியம்மாள் மற்றும் 17 வயது சகோதரனின் உதவியுடன் உடலை வீட்டின் அருகே உள்ள செப்டிக் டேங்கில் வைத்து மூடிவிட்டார்.
சம்பவம் நடந்து எட்டு மாதங்களுக்கு செப்டிங் டேங் க்ளின் செய்த போது செப்டிக் டேங்கில் எலும்புக்கூடு இருப்பதை வீட்டின் உரிமையாளர் பார்த்துள்ளார். உடனே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் எலும்புக்கூடுகளை கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பினர். உயிரிழந்தவர் எதிர் வீட்டில் வசிக்கும் மாடசாமி என்பது தெரிய வந்தது.
பேச்சியம்மாளிடம் போலீசார் நடத்திய விசாரணையில் மாடசாமியை கொலை செய்து செப்டிங் டேங்கில் போட்டு மூடியதை ஒப்புக்கொண்டார். பேச்சியம்மாள், தாய் மாரியம்மாள், சகோதரர் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.