தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமாக இருக்கும் பட்சத்தில் எதிர்க்கட்சியினரை பழிவாங்க மட்டுமே காவல்துறையை முதல்வர் ஸ்டாலின் பயன்படுத்தி வருகிறார் என அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பட்டியல் சமூக மக்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோருக்கு எதிரான குற்றங்கள் மிகவும் அதிகரித்திருப்பதாக அறிக்கை கூறுகிறது. 2023 ஆம் ஆண்டில் மட்டும் 201 முதியவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். நாட்டிலேயே வயது முதிர்வுக்கு எதிராக 2,104 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டு நான்காவது இடத்தில் தமிழகமுள்ளது.
இது தவிர திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக இருந்த பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களும் திமுக ஆட்சியில் அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு நிலைமை இத்தனை மோசமாக இருக்கும் பட்சத்தில் எதிர்க்கட்சியினரை பழிவாங்கவும், திமுக ஆட்சி மீது விமர்சனம் வைத்தவர்களின் கருத்து சுதந்திரத்தை பறிக்கவும் மட்டுமே காவல்துறையை முதல்வர் ஸ்டாலின் பயன்படுத்தி வருகிறார்.
காவல்துறை மற்றும் அரசு உயர் அதிகாரிகளை திமுக நிர்வாகிகள் போல பயன்படுத்தி அரசு துறைகள் அனைத்துமே செயல் இழக்க செய்துவிட்டனர். இதன் விளைவுதான் சீரழிந்து போல சட்டம் ஒழுங்கும், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான குற்றங்களும். எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஆடிக் கொள்ளுங்கள், இன்னும் ஆறு மாத காலம்தான். உங்கள் அராஜகத்திற்கு தமிழக மக்கள் முடிவுரை எழுதுவார்கள்” என தெரிவித்துள்ளார்.
Read more: ஜீரா நீர் vs ஆப்பிள் சீடர் வினிகர்!. எடை இழப்புக்கு எது சிறந்தது?.