Holiday: வரும் 25-ம் தேதி உள்ளூர் விடுமுறை…! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!

அரியலூர் மாவட்டத்தில் வரும் 25ஆம் தேதி உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா செய்திக்குறிப்பில்; “அருள்மிகு கலியுக வரதராஜ பெருமாள் திருக்கோயில் தேர் திருவிழாவினை முன்னிட்டு ஏப்ரல் 25-ம் தேதி வியாழக்கிழமை அன்று அரியலூர் மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து விதமான கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை விடப்படுகிறது.

கல்லூரி மற்றும் பள்ளிகளில் தேர்வு தேதிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளன. தேர்வு நடைபெறும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு இந்த விடுமுறை அறிவிப்பு பொருந்தாது.அத்துடன் மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறைந்தபட்ச அலுவலர்களுடன் அரசின் பாதுகாப்பினை கருதியும் அவசர அலுவலர்கள் மேற்கொள்ளும் பொருட்டு செயல்படும். இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் மே 4ம் தேதி சனிக்கிழமை பணிநாளாக செயல்படும் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

அதிர்ச்சி! அமெரிக்காவில் வேகமாக பரவிவரும் பறவைக்காய்ச்சல் ; எச்சரிக்கை விடுக்கும் WHO

Sun Apr 21 , 2024
H5N1 வைரஸ் பாதிக்கப்பட்ட கால்நடைகளிலிருந்து பெறப்படும் பாலில் H5N1 வைரஸ் அதிகமாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் (WHO) அதிர்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளது. ஜெனீவாவில் நடைபெற்றா ஊடகவியலாளர் சந்திப்பின் போது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் உலகளாவிய காய்ச்சல் திட்டத்தின் தலைவர் வென்கிங் ஜாங் பேசுகையில், “H5N1 என்ற பறவைக்காய்ச்சலானது பறவைகளிடமிருந்து, தற்பொழுது ஆடு மாடு போன்ற கால்நடைகளுக்கு பரவியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளிலிருந்து பெறப்படும் பாலில் வைரஸ் இருப்பது உறுதி […]

You May Like