அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ எடப்பாடி அடாவடி செயல்பாடுகளால் அதிமுக மூத்த தலைவர்கள் திமுகவுக்கு செல்வது துரதிர்ஷ்டவசமானது. பழனிசாமியை வீழ்த்தவே அவர்கள் திமுகவில் இணைந்துள்ளனர் என்று நான் கருதுகிறேன்.. எடப்பாடி பழனிசாமியை வீழ்த்தும் அளவுக்கு நாங்கள் பெரிய கட்சி இல்லை.. நாங்கள் வளர்ந்து வருகிறோம்..
அதற்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம்.. தேர்தல் கூட்டணி தொடர்பாக பல கட்சிகளை சேர்ந்தவர்கள் என்னை அணுகினார்கள்.. அவர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.. ஆரம்பக் கட்ட பேச்சுவார்த்தை தான் நடந்து வருகிறது.. ஜனவரி மாதத்தில் கூட்டணி குறித்த முடிவை அறிவிப்போம்.. அமமுக இடம் பெறும் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக இருக்கும் என்பதை உறுதியாக சொல்கிறேன்.
தமிழ்நாட்டில் திமுக – தவெக இடையே தான் போட்டி, விஜய்யின் அரசியல் வருகையால் அதிமுகவிற்கு இந்த தேர்தலில் 3-வது இடம் தான் கிடைக்கும்.. திமுக – தவெக இடையே தான் போட்டி என்பதை பொதுமக்களின் பார்வையாக சொல்கிறேன்.” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் “ எடப்பாடி பழனிசாமி என்ற துரோக சக்தி வீழ்த்தப்பட வேண்டும்.. இந்த நோக்கத்தில் தான் அமுமக செயல்படுகிறது.. அவரை வீழ்த்திய பின்னர் மீண்டும் அதிமுகவில் மறு மலர்ச்சி ஏற்படுத்த முயற்சி ஏற்படும்.. துரோகம் செய்தவர்களை சும்மா விட்டுவிட முடியாது.. எங்களுக்கு துரோகம் இழைத்துவிட்டு, எங்களை சந்திக்கவே அவருக்கு பயம் உள்ளது.. எனவே எங்களை சந்திப்பதையே தவிர்த்து வருகிறார்..” என்று தெரிவித்தார்..
Read More : Flash : மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய தங்கம் விலை.. இன்றைய ரேட் என்ன?



