“சாப்பாடு கொஞ்சம் லேட் ஆகும்…” மனைவியின் ஒரு பதில்; ஆத்திரத்தில் கணவன் செய்த கொடூர செயல்!

WhatsApp Image 2026 07 31 at 1.05.11 PM 1

மது ஒருவரின் உடலை மட்டுமல்ல, குடும்பத்தின் நிம்மதியையும் சீரழித்து விடுகிறது. போதைக்கு அடிமையானவர்கள் கோபத்தையும் உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்த முடியாமல், கணநேரத்தில் கொடூரமான முடிவுகளை எடுக்கிறார்கள். அத்தகைய முடிவுகள் பல குடும்பங்களை நிரந்தர சோகத்தில் தள்ளி விடுகின்றன. குடிபோதையால் மனிதநேயமே மறந்து அரங்கேறிய ஒரு கொடூர சம்பவம் பீகாரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பீகார் மாநிலம் ஜெனாபாத் பகுதியைச் சேர்ந்த குணால் குமார், வேலைக்கு செல்லாமல் பெரும்பாலும் மது அருந்தி சுற்றி வந்ததாக தெரிகிறது. இதனால் அவரது மனைவி அன்ஷி தேவியுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. குடும்ப வாழ்க்கை தொடர்ந்து பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு வந்தது. சம்பவத்தன்று வீட்டில் மற்றவர்கள் அனைவரும் விவசாய வேலைக்கு சென்றிருந்தனர். அன்ஷி தேவி மட்டும் வீட்டில் இருந்து மதிய உணவை சமைத்துக் கொண்டிருந்தார். இதற்கிடையில் நண்பர்களுடன் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த குணால் குமார், உடனே சாப்பாடு கேட்டு சண்டையிட்டார்.

ஆனால் அவரது மனைவி, சமையல் இன்னும் முடியவில்லை, சிறிது நேரத்தில் உணவு தயாராகிவிடும் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குணால், தனது மனைவியுடன் வாக்குவாதம் செய்துள்ளார். ஒரு கட்டத்தில், அவர் தனது வீட்டில் இருந்த கோடாரியை எடுத்து தனது மனைவியை கொடூரமாக தாக்கியுள்ளார். அவரது மனைவி தன்னை விட்டுவிடுமாறு பல முறை கெஞ்சியும் அவர் நிறுத்தவில்லை. இதில் பலத்த காயம் அடைந்த அவரது மனைவி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பின்னர் அவரது தலையை கயிற்றில் கட்டி வீட்டின் முன்புறம் இருந்த மரத்தில் தொங்கவிட்டுவிட்டு, அங்கேயே அமைதியாக அமர்ந்திருந்தார். இந்த காட்சியை பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து குணால் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம், குடிபோதையும் கட்டுப்பாடற்ற கோபமும் இணைந்தால் அது எவ்வளவு கொடூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை மீண்டும் ஒருமுறை நினைவூட்டியுள்ளது.

Also Read: “இவன் இருந்தா நம்ம சேர முடியாது…” கணவனை தீர்த்துக்கட்ட மனைவி போட்ட பிளான்… இறுதியில் கணவர் கொடுத்த ட்விஸ்ட்!

Saranya

Next Post

சூர்யாவுடன் மீண்டும் நடிக்க ஆசை… ஆனால் ஒரு கண்டிஷன் வைத்த ஜோதிகா!

Fri Jul 31 , 2026
ஒரு காலத்தில் காதலை மென்மையாகவும், உணர்வுபூர்வமாகவும் சொல்லிய தமிழ் திரைப்படங்கள் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்திருந்தன. ஆனால் சமீப காலங்களில் வெளியாகும் பல படங்களில் காதலின் உணர்வை விட கவர்ச்சிக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில், தமிழ் சினிமாவில் மீண்டும் அழகான காதல் கதைகள் வர வேண்டும் என்ற தனது விருப்பத்தை நடிகை ஜோதிகா வெளிப்படுத்தியுள்ளார். நடிகர் சூர்யாவும், நடிகை ஜோதிகாவும் தமிழ் […]
surya jothika

You May Like