Counselling: பொறியியல் மாணவர்களுக்கு இன்று முதல்…! யாரும் மிஸ் பண்ணிடாதீங்க… தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..‌.!

பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்த மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று முதல் நடைபெறுமென அரசு தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் பி.இ, பி.டெக் பொறியியல் படிப்பில் 2022-23-ம் கல்வியாண்டில் முதலாம் ஆண்டில் மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்பங்கள் பாெறியியல் மாணவர் சேர்க்கை குழுவால் ஜூன் 20-ம் தேதி முதல் பெறப்பட்டு வருகிறது. ஜூலை 27-ம் தேதி வரையில் 2,11, 905 மாணவர்கள் விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனர். அவர்களில் 1, 67,387 மாணவர்கள் கட்டணங்களை செலுத்தி உள்ளனர்.

பொறியியல் படிப்பிற்கான சிறப்பு பிரிவு மற்றும் பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்க உள்ள நிலையில் மாணவர்கள் கல்லூரிகளை தேர்ந்தெடுப்பது மற்றும் அவற்றை உறுதி செய்வதற்கான ஆன்லைன் கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. Cut offமதிப்பெண் அடிப்படையில் 4 சுற்றுகளாக கலந்தாய்வு நடைபெற உள்ளது. இன்று 7.5 சதவீத அரசு பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. அதன்படி 21-ம் தேதி முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகள் விளையாட்டு பிரிவினர், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 21 முதல் 24ந் தேதி வரை நடைபெறுகிறது.

மேலும் 25-ம் தேதி பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கி அக்டோபர் 23-ம் தேதி வரை நடைபெறுகிறது. பி.இ., பி.டெக்., படிப்புகளில் சேர இன்று முதல் கலந்தாய்வு நடைபெறும் என அரசு தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

பொதுத் துறையில் ஒப்பந்த மற்றும் தனியார் ஊழியர்களுக்கான பணிக்கொடைத் திட்டம்...! மத்திய அரசு பதில்...

Sat Aug 20 , 2022
கருணைத் தொகையில் எந்த மாற்றமும் இல்லை என்று சில மாதங்களுக்கு முன்பு அரசு தெரிவித்தது.ராஜ்யசபாவில் அரசுத் துறை மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த அனைத்து ஊழியர்களுக்கும் பணி நிறைவு ஆண்டுக்கான 15 நாள் ஊதியத்தில் இருந்து 30 நாள் சம்பளமாக உயர்த்த அரசு பரிசீலிக்கிறதா” என்ற கேள்விக்கு டீலி கேள்விக்கு பதிலளித்த தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சர் ராமேஷ்வர் டெலி, இந்த ஆண்டு மார்ச் மாதம் ஊழியர்களுக்கு […]

You May Like