வரும் 19ஆம் தேதி நடக்கும் பயங்கரம்..!! 7 மாவட்டங்களுக்கு அலெர்ட்..!! வானிலை ஆய்வு மையம்..!!

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ”இன்று காலை தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் 19ஆம் தேதி வாக்கில் வலுபெறக்கூடும். இது மேலும் அதற்கடுத்த 3 தினங்களில் மேற்கு – வடமேற்கு திசையில் தமிழக – புதுவை மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதனால், இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, கடலூர், உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்யக்ககூடும்.

வரும் 19ஆம் தேதி நடக்கும் பயங்கரம்..!! 7 மாவட்டங்களுக்கு அலெர்ட்..!! வானிலை ஆய்வு மையம்..!!

19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை கடலோர தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், காரைக்கால், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை நேரங்களில் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்” என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

CHELLA

Next Post

நம்ம இந்தியாவில் கூட இதைத்தான் பாஸ்வேர்டாக வைத்துள்ளனர்…!!

Thu Nov 17 , 2022
ஆன்லைனில் பெரும்பாலானவற்றிற்கு பாஸ்வேர்டை மிகவும் எளிமையான ஒன்றாக வைத்திருப்பது, திருடர்களின் கையில் சாவியை கொடுப்பது போன்றுதான். அந்தவகையில் இந்தியாவில் என்னென்ன வார்த்தை பாஸ்வேர்டாக உள்ளது தெரியுமா? ஆன்லைனில் டிஜிட்டல் அடையாளத்தை பாதுகாக்க மிக முக்கியமான கூறுகளின் ஒன்று கடவுச்சொல். பல நாடுகளில் எளிதான கடவுச் சொற்களைத்தான் பயன்படுத்துகின்றார்கள். இந்தியா மட்டும் விதிவிலக்கா என்ன?. இந்தியாவிலும் பெரும்பாலும் மக்கள் மிக எளிதான கடவுச் சொற்களைத்தான் பயன்படுத்தி வருகின்றனர். இது தொடர்பாக ’நார்ட்பாஸ்’’- […]
password

You May Like