கோவை மாவட்டம் சூலூர் அருகே 40 வயதான நபருக்கு கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்து முடிந்தது. இவரது மனைவி 7 மாத கர்ப்பமாக உள்ளார். மனைவியின் தங்கைக்கு 32 வயதாகிறது. திருமணம் ஆகாத தனது தங்கைக்கு அக்கா மாப்பிள்ளை பார்த்து வந்தார். இறுதியில், மாப்பிள்ளையை பார்த்து திருமணமும் செய்து வைத்தார்.
ஆனால், திருமணமாகி 4வது நாளில் தங்கையை காணவில்லை.. உறவினர்கள் அவரை எங்கெங்கோ தேடினார். ஆனால் எங்குமே அந்த பெண் கிடைக்கவில்லை. அதே நேரம் அகாவின் கணவரையும் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் சூலூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். இருவரையுமே ஒரே நேரத்தில் காணவில்லை என்பதால், ஒருவேளை இருவரும் எங்காவது சென்றிருப்பார்களோ என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை கையில் எடுத்தனர்.
2 பேரின் செல்போன் டவர்களையும் ஆய்வு செய்தபோது, இருவருமே ஒரே இடத்தில் இருப்பது உறுதியானது. இதனையடுத்து 2 பேரையும் சுற்றிவளைத்த போலீசார் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரித்தனர். அப்போதுதான், புதுப்பெண்ணுக்கு திருமணத்துக்கு முன்பே, தன்னடைய அக்கா கணவருடன் பழக்கம் இருந்தது தெரியவந்தது. தகவலின்படி அக்காவின் திருமணத்திற்கு பிறகு மாமாவுக்கும் கொளுந்தியாவுக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டுள்ளது.
இந்த விஷயம் மனைவிக்கு தெரிய வரவே தங்கைக்கு அவசர அவசரமாக திருமண ஏற்பாடு செய்துள்ளார். திருமணம் முடிந்த பிறகு புது மாப்பிள்ளையுடன் சரியாக பேசாமல் இருந்துள்ளார். ஒருகட்டத்தில் அக்கா கணவருக்கு போன் செய்து, எனக்கு இந்த வாழ்க்கை பிடிக்கவில்லை.. உங்களுடனேயே வந்துவிடுகிறேன் என்று சொல்லி உள்ளார்.. இதற்கு அவரும் சம்மதம் தெரிவிக்க இருவரும் வீட்டை விட்டு சென்றுள்ளனர். திருமணமான 4 நாளில் அக்கா கணவருடன் தங்கை ஓடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



