Forex: வரலாறு காணாத உச்சத்தை தொட்ட இந்திய பொருளாதாரம்!… அந்நிய செலாவணி கையிருப்பு 642.49 பில்லியன் டாலர்!

Forex: இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பில் பெரும் ஏற்றம் பதிவாகியுள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, மார்ச் 15ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 6.396 பில்லியன் டாலர் அதிகரித்து 642.492 பில்லியன் டாலரை எட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. இது முந்தைய வாரத்தை விட 10.47 பில்லியன் டாலர்கள் அதிகரித்து 636.095 பில்லியன் டாலர்களை எட்டியது.

மார்ச் 15ம் தேதி நிலவரப்படி அந்நிய செலாவணி கையிருப்பின் முக்கிய அங்கமான அந்நிய நாணய சொத்துகள் 603 கோடி டாலர் உயர்ந்து 56,838 கோடி டாலராக உள்ளது. சர்வதேச நிதியத்தில் நாட்டின் கையிருப்பு 13 கோடி டாலர்கள் உயர்ந்து 469 கோடி டாலராக உள்ளது.

2021 அக்டோபரில் அந்நிய செலாவணி கையிருப்பு எப்போதும் இல்லாத அளவிற்கு $645 பில்லியன்களை எட்டியது. கடந்த ஆண்டு முதல், மத்திய ரிசர்வ் வங்கி, உலகளாவிய வளர்ச்சிகள் காரணமாக ஏற்படும் அழுத்தங்களுக்கு மத்தியில், ரூபாயின் மாற்று விகிதத்தை பராமரிக்க நாணய இருப்புக்களை பயன்படுத்தியது. இதனால் கரன்சி கையிருப்பு பாதிக்கப்பட்டது.

Readmore: Germany: அரவிந்த் கெஜ்ரிவால் கைது…! ஜெர்மனியின் கருத்துக்கு இந்தியா கண்டனம்…!

Kokila

Next Post

DMK: இணையத்தில் வைரலான வீடியோ...! திமுக-வின் மலிவு அரசியல் எல்லையை தாண்டிவிட்டது...!

Sun Mar 24 , 2024
பெண்களைக் குறி வைத்து அவர்களைக் கீழ்த்தரமாக விமர்சிக்கும் திமுக-வின் மலிவு அரசியல் இன்று எல்லையைத் தாண்டிவிட்டது. திருச்செந்தூரில் திமுக எம்பி கனிமொழிக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பின் போது பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்; நான் நாளிதழில் விளம்பரம் போடும்போது, அதில் தவறுதலாக சீன ராக்கெட்டின் படம் இடம்பெற்றிருந்தது. ஆனால், பிரதமர் மோடி சீன நாட்டு பிரதமருடன் மகாபலிபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு வேஷ்டி சட்டையுடன் சுற்றுலாவாக பயணித்தார். மேலும் பிரதமர் […]

You May Like