இன்றைய போர்கள் வெறும் துப்பாக்கிகள் அல்லது ஏவுகணைகளால் மட்டுமே நடைபெறுவதில்லை. அதற்கு புதிய வடிவம் கிடைத்துள்ளது.. அது மைக்ரோ ட்ரோன் எனப்படும் சிறிய விமானங்கள். இவை மிகச் சிறிய அளவில் இருப்பினும், அவற்றின் சக்தி மற்றும் தொழில்நுட்பம் மிகப் பெரிய ஆயுதங்களுக்கே சவாலாக உள்ளது.
மைக்ரோ ட்ரோன் என்பது மனிதர் இல்லாத வானூர்தி (UAV) ஆகும். இதன் எடை சில நூறு கிராம் முதல் இரண்டு கிலோ வரை இருக்கும். இதில் கேமரா, சென்சார், சிறிய மோட்டார்கள் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் இவை உயரமான வானத்தில் பறந்து புலனாய்வு மற்றும் கண்காணிப்பு பணிகளை செய்ய முடிகிறது.
இவை குறிப்பாக புலனாய்வு (reconnaissance), கண்காணிப்பு (surveillance), நுண்ணறிவு (intelligence) பணிகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை எதிரி நாட்டின் எல்லைக்குள் சென்று வீடியோ பதிவு, இடம் தொடர்பான தரவுகள் போன்ற முக்கிய தகவல்களை சேகரிக்கின்றன.
பல மைக்ரோ ட்ரோன்கள் ஒரே நேரத்தில் குழுவாக இயங்கும்போது, அவற்றை ஸ்வார்ம் ட்ரோன்கள் (Swarm Drones) என்று அழைக்கப்படுகிறது. இவை ஒரே நேரத்தில் எதிரி இலக்குகளை தாக்கவும், அல்லது மிகச் சிறிய அளவிலான புவியியல் தகவல்களை சேகரிக்கவும் முடியும். மிகச் சிறிய அளவு காரணமாக இவை ரேடார் அல்லது சாதாரண பாதுகாப்பு அமைப்புகளால் கண்டறிய முடியாதவை, இதனால் எதிர்காலப் போர்களில் மிக ஆபத்தான ஆயுதமாகக் கருதப்படுகின்றன.
அமெரிக்கா, இரான், சீனா, துருக்கி, ரஷ்யா, இஸ்ரேல் போன்ற அனைத்து பெரிய நாடுகளும் தங்கள் இராணுவத் திட்டங்களில் மைக்ரோ ட்ரோன்களை இணைத்துள்ளன. ஆரம்பத்தில் இவை கண்காணிப்புக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டன; ஆனால் இப்போது தாக்குதல்களிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. சமீபத்தில், ரஷ்யா உக்ரைனில் ட்ரோன் தாக்குதல் நடத்தி, மின்சார வலையமைப்பை சேதப்படுத்தி, முழு பிரதேசத்தையும் இருளில் ஆழ்த்தியது. இத்தகைய குழுத் தாக்குதல்கள் “மரண ஸ்வார்ம்” (Death Swarms) என அழைக்கப்படுகின்றன, ஏனெனில் அவற்றைத் தடுக்குவது மிகவும் கடினம்.
ஸ்வார்ம் ட்ரோன்கள் முழுவதும் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் கணினி வலைத்தளங்கள் மூலம் இயக்கப்படுகின்றன. ஒவ்வொரு ட்ரோனும் ஒன்றோடொன்று இணைந்திருப்பதால், அவை ஒரு உயிருள்ள அமைப்பு போல இயங்குகின்றன.
பணித் திட்டம் முதலில் உருவாக்கப்படுகிறது, பின்னர் அனைத்து ட்ரோன்களும் ஒரே நேரத்தில் பறக்க விடப்படுகின்றன. பறப்புக்குப் பிறகு, அவை சென்சார் மற்றும் கேமரா மூலம் இலக்குகளை அடையாளம் கண்டு, தேவைக்கேற்ப தாக்குதல் நடத்தவோ அல்லது தகவல் அனுப்பவோ செய்கின்றன.
ஒரு ட்ரோன் தாக்குதலில் அழிந்தாலும், மீதமுள்ள ட்ரோன்கள் பணி நிறைவேற்றத்தைத் தொடரும். இதுவே ஸ்வார்ம் தொழில்நுட்பம் எதிர்காலப் போர்களின் திசையை மாற்றும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
Read More : இந்த முஸ்லிம் நாடு தான் உலகின் பழமையான நாடு! சவுதி அரேபியா, துருக்கி, ஈராக் இல்ல..



