கள்ளக்காதலனுடன் புதுமனைவி செய்த அந்த ஒரு காரியம்.. நேரில் பார்த்த கணவன் எடுத்த அதிரடி முடிவு!

Sex 2025

திருமணமாகி ஒன்றரை மாதங்களே ஆன நிலையில், மனைவியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்ட கணவர், அவரை கண்காணிக்கத் தொடங்கியுள்ளார். கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் வேறு ஒரு இளைஞர் வீட்டுக்கு வந்ததை அக்கம் பக்கத்தினர் தெரிவித்த நிலையில், திடீரென வீட்டுக்கு திரும்பிய அவர் மனைவியையும் அந்த இளைஞரையும் ஒன்றாகப் பார்த்துள்ளார். இதையடுத்து ஏற்பட்ட தகராறு காவல்துறை புகார் வரை சென்றுள்ளது.


உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டம் சிர்கான் கிராமத்தைச் சேர்ந்த 28 வயது இளைஞருக்கும், மத்தியப் பிரதேசத்தின் பாந்தர் பகுதியைச் சேர்ந்த 25 வயது இளம்பெண்ணுக்கும் கடந்த ஜூன் 24ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்குப் பிறகு இருவரும் குடும்பமாக வசித்து வந்தனர்.

திருமணத்துக்குப் பிறகு மனைவி தயாரித்த உணவை சாப்பிடும் ஒவ்வொரு முறையும் உடல்நலப் பிரச்சனை ஏற்பட்டதால் கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனிடையே, அவர் வீட்டில் இல்லாத நேரங்களில் இளைஞர் ஒருவர் அடிக்கடி வந்து செல்வதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர். இதனால் மனைவியின் நடவடிக்கையை அவர் தீவிரமாக கண்காணிக்கத் தொடங்கினார்.

கடந்த 23ஆம் தேதி கணவர் வீட்டை விட்டு வெளியே சென்றிருந்த நேரத்தில் அந்த இளைஞர் மீண்டும் வீட்டுக்கு வந்துள்ளார். இருவரும் வீட்டின் கதவை பூட்டிக்கொண்டதை அக்கம் பக்கத்தினர் பார்த்து கணவருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் கிடைத்ததும் உடனடியாக வீடு திரும்பிய கணவர், தன்னிடம் இருந்த மற்றொரு சாவியை பயன்படுத்தி கதவைத் திறந்துள்ளார். அப்போது மனைவியும் அந்த இளைஞரும் ஆடைகள் இல்லாமல் உல்லாசமாக இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இதனால் அங்கு தகராறு ஏற்பட்டுள்ளது. கணவர் சத்தம் எழுப்பிய நிலையில், மனைவி அவரது வாயை மூடியதாகவும், அந்த இளைஞர் கணவரின் கழுத்தை நெரித்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் அந்த இளைஞரை பிடித்து வைத்திருந்தனர்.

தகவல் அறிந்து வந்த போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். இதையடுத்து கணவர் அளித்த புகாரில், தனது மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாகவும், திருமணமான சில வாரங்களிலேயே தனக்கு வழங்கப்பட்ட பால் மற்றும் உணவில் தூக்க மாத்திரைகள் கலந்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சனையின் காரணமாக தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் அச்சுறுத்தல் இருப்பதாகவும், மனைவி மற்றும் அந்த இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். உணவில் தூக்க மாத்திரைகள் கலக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு, மனைவிக்கும் அந்த இளைஞருக்கும் இடையேயான தொடர்பு உள்ளிட்ட அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Also Read: “புருஷன் வேண்டாம்.. கள்ளக்காதலன் கூட இருந்தா போதும்!” கள்ளக்காதல் மோகத்தில் மனைவி செய்த கொடூரம்!

Saranya

Next Post

கணவரின் தம்பி மீது ஏற்பட்ட மோகம்.. கள்ளக்காதலை தட்டிக்கேட்ட கணவனுக்கு நேர்ந்த கொடூரம்!

Thu Aug 27 , 2026
கடலூர் மாவட்டத்தில் கிணற்றில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம், போலீசாரின் தொடர் விசாரணையில் எதிர்பாராத கொலை வழக்காக மாறியுள்ளது. 10 ஆண்டுகளாக திருமண வாழ்க்கையில் இருந்த ஒருவரின் மரணம், குடும்பத்துக்குள் ஏற்பட்ட உறவு பிரச்சனையுடன் தொடர்புடையது என்பது விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மனைவியுடன் தொடர்பில் இருந்ததாக சந்தேகிக்கப்பட்ட நபருடன் ஏற்பட்ட மோதலே உயிரிழப்புக்கு காரணமானதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே ஓரங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இளையராஜா, […]
WhatsApp Image 2026 08 27 at 10.24.21 AM 1 1

You May Like