BJP: மாநில தலைவர் பதவி வெங்காயம் போன்றது…! அண்ணாமலை கருத்து…!

deccanherald 2024 07 cb49fef6 4362 4a81 9d8d ecb90333ef90 Post Lok Sabha polls Annamalai and EPS indulge in war of words

என்னை பொறுத்தவரை மாநிலத் தலைவர் பதவி என்பது வெங்காயம் போன்றது என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை; பாஜக-வில் தேசிய அளவிலான கட்சி பொறுப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். “மாநிலத் தலைவர் பதவி வெங்காயம் போன்றது. உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது. பதவிகளுக்கு பின்னால் செல்பவன் நான் அல்ல என அண்ணாமலை கூறினார்.

தொடர்ந்து ஆட்சியில் பங்கு கொடுப்பதற்கு நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரை நாங்கள் யாரையும் ஏமாற்றுகின்ற கட்சி அல்ல; ஏமாறும் கட்சியும் அல்ல. எந்த கட்சியையும் கீழே தள்ளி நாங்கள் வளர வேண்டும் என விரும்புவது இல்லை. இந்த விஷயம் தொடர்பாக கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கம் கொடுத்துள்ளார். இது குறித்து இதற்கு மேல் நான் பேசுவது சரியாக இருக்காது.

அதிமுக உடன் கூட்டணி அமைத்ததில் என்னுடைய பங்கு எதுவும் இல்லை. என்னுடைய நிலைப்பாட்டில் நான் உறுதியாக உள்ளேன். நான் பாஜக தொண்டன். தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தை பதவியில் இருந்து அகற்ற வேண்டுமென்ற ஒற்றை நோக்கத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். முன்பை போல அரசியல் இல்லை. இதை தலைவர்களும் புரிந்து கொள்வார்கள்.

எதிர்வரும் தேர்தலில் ஒரு கட்சி தனிப்பட்ட முறையில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியுமா என்று எனக்கு தெரியாது. திமுக தனித்து ஆட்சி அமைக்க முடியுமா என்று எனக்கு தெரியாது. அது போல எந்தவொரு கட்சியும் தனியாக ஆட்சி அமைக்க முடியுமா? அல்லது கூட்டணி கட்சியினர் மற்றும் தொண்டர்களின் உழைப்பை கொண்டு ஆட்சிக்கு வரலாம். இன்றைய தமிழகம் மாறியுள்ளது என்றார்.

Vignesh

Next Post

கும்பகர்ணன் ஏன் ஆறு மாதம் தூங்கிக் கொண்டே இருந்தார் தெரியுமா?. ஆராய்ச்சியாளர்கள் கூறும் உண்மை!.

Mon Jul 21 , 2025
கும்பகர்ணனைப் பற்றிய மிகவும் பரவலான நம்பிக்கை என்னவென்றால், அவர் 6 மாதங்கள் தூங்குவார் என்பதுதான். பல வருட தவத்திற்குப் பிறகு, அவர் பிரம்மாவிடம் வருடத்திற்கு 6 மாதங்கள் தூங்கும் வரத்தைப் பெற்றார். பிரம்ம தேவர் கும்பகர்ணனின் இந்த விருப்பத்தை நிறைவேற்றி, வருடத்திற்கு 6 மாதங்கள் தூங்கும் வரத்தை வழங்கினார். இந்தக் கதையை நீங்கள் சிறுவயதிலிருந்தே கேட்டு வருகிறீர்கள், ஆனால் இப்போது ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் புதிய கேள்வி எழுந்துள்ளது. அவர்களின் கேள்வி […]
Kumbhakarna sleep 11zon

You May Like