பெற்றோர்களே கவனம்…! 6 முதல்‌ 18 வயதுடைய குழந்தைகளுக்கு..! வரும் 11-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு…!

வரும் 11ம் தேதி வரை செல்லாத மாணவர்களை கண்டறியும் பணியானது நடைபெற உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும்‌ 6 முதல்‌ 18 வயதுடைய பள்ளிசெல்லா/ இடைநின்ற குழந்தைகள்‌ மற்றும்‌ மாற்றுத்திறன்‌ கொண்ட குழந்தைகளை கண்டறிய சிறப்புக்‌ கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. இதில்‌ கண்டறியப்படும்‌ சூழந்தைகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வியின்‌ கீழ்‌ சிறப்புப்‌ பயிற்சி மையங்கள்‌ மூலம்‌ கல்வி வழங்கப்பட்டு வருகிறது.


இது ஒரு தொடர்‌ பணியாகும்‌. கணக்கெடுப்பிற்கான தரவுகள்‌ அனைத்தையும்‌ உள்ளீடு செய்து கணக்கெடுப்பு மேற்கொள்ளும்‌ வகையில்‌ வடிவமைக்கப்பட்டுள்ள கைபேசி செயலி மூலம்‌ 2022 -23 ஆம்‌ ஆண்டிற்கான கணக்கெடுப்பு பணி அனைத்து ஒன்றியங்களிலும்‌ டிசம்பர்‌ 19 முதல்‌ ஜனவரி 11 வரை எந்தவொரு குடியிருப்பும்‌ விடுபடாமல்‌ வீடு வாரியாக கணக்கெடுப்பு பணிநடைபெற்று வருகிறது.

ஒன்றிய அளவில்‌ கணக்கெடுப்பில்‌ ஈடுபடும்‌ களப்பணியாளர்களாக பள்ளி தலைமை ஆசிரியர்கள்‌/ஆசிரியர்கள்‌, ஆசிரியர்‌ பயிற்றுநர்கள்‌, சிறப்பு பயிற்றுநர்கள்‌ இயன்‌ முறை பயிற்சியாளர்கள்‌, பள்ளி மேலாண்மைக்‌ குழு, கல்வி தன்னார்வலர்கள்‌, சுயஉதவிக்‌ குழுக்கள்‌ மற்றும்‌ தன்னார்வல தொண்டு நிறுவன பணியாளர்கள்‌ இப்பணியில்‌ ஈடுபட்டு வருகின்றனர்‌.

6 முதல்‌ 18 வயதுடைய பள்ளி செல்லா/இடைநின்ற குழந்தைகள்‌ மற்றும்‌ 6 முதல்‌ 18 வயது வரையுள்ள மாற்றுத்திறன்‌ கொண்ட குழந்தைகளை கண்டறியும்‌ கணக்கெடுப்பு பணி குடியிருப்பு வாரியாக மேற்கொள்ள சார்புடைய அனைத்து துறையினரின்‌ ஒத்துழைப்பையும்‌ வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

புது அறிவிப்பு...! 2023 ஜனவரி முதல்... இதற்கு தடை...! தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு...!

Wed Dec 28 , 2022
2023 ஜனவரி முதல் தேதியில் இருந்து புதிய நிர்வாக அலகுகளை உருவாக்க முழு தடை விதிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் விடுத்துள்ள வேண்டுகோளை அடுத்து, 1950-ம் ஆண்டில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 8(A) பிரிவின்படி அசாம் மாநிலத்தில் சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதிகளில் மறுவரையறை செய்யும் முயற்சிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் அனுப் சந்திர பாண்டே, […]
விரைவில் வருகிறது ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்..!! எதற்காக..? யாருக்காக தெரியுமா..?

You May Like