கூண்டோடு திமுகவில் இணைந்த தொண்டர்கள்.. தட்டி தூக்கிய செ.பாலாஜி..!! அதிமுகவில் விழும் அடுத்த விக்கெட்.. அவரா? 

DMK ADMK 2025

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அதன்படி, தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் மீண்டும் கூட்டணியாக இணைந்து சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க உள்ளன.


2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் சேர்க்கும் முயற்சியில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். அந்த வகையில் திமுக சார்பில் “ஓரணியில் தமிழ்நாடு” என்ற இயக்கத்தின் மூலமாக கட்சி நிர்வாகிகள் புதிய உறுப்பினர்களை சேர்த்து வருகின்றனர். மற்ற கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளை திமுகவில் இணைக்கும் பணியை செந்தில் பாலாஜிக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கியுள்ளார்.

இதற்கிடையில், அதிமுகவில் அங்கீகாரம் மற்றும் மரியாதை கிடைக்காமல் சிரமப்படும் சில முக்கிய தலைவர்கள், எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் திமுக பக்கம் நகர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. திமுகவிலிருந்து நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுக்கும் நோக்கத்தில், திமுக ‘ஆபரேஷன் அதிமுக’ என்ற பெயரில் ஒரு ரகசியத் திட்டத்தை தொடங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தத் திட்டத்தின் கீழ், மாவட்ட செயலாளர்களிடம் அதிமுக நிர்வாகிகளை தொடர்புகொண்டு, திமுகவிற்கு வரச் செய்வதற்கான பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதிமுகவில் உட்கட்சி பிரச்சனை நிலவி வரும் சூழலில் அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி பல இடங்களில் அதிருப்தியில் உள்ளோரை திமுக தங்கள் வசம் இழுத்து வருகிறது. கொங்கு மண்டலத்தில் செந்தில் பாலாஜி கச்சிதமாக காய் நகர்த்தி அதற்கான வேலைகளை செய்து வருகிறார். அந்த வகையில் கரூரில் அதிமுக, பாஜக, தேமுதிகவில் இருந்து விலகிய பலர் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். கொங்கு மண்டலத்தில் முக்கிய தலைவர் ஒருவரை இணைக்க செந்தில் பாலாஜி திட்டமிட்டுள்ளாராம்.

Read more: குட்நியூஸ்!. ரஷ்யாவின் புற்றுநோய் தடுப்பூசி பயன்பாட்டுக்கு தயார்!. சோதனைகளில் 100% வெற்றி!. விஞ்ஞானிகள் தகவல்!

English Summary

The volunteers who joined DMK with a cage.. S. Balaji knocked them out..!! The next wicket to fall in AIADMK.

Next Post

முன்கூட்டியே தயாராக இருந்த 20 சவக்குழிகள்..!! மயானத்தை பார்த்து பீதியில் உறைந்துபோன பொள்ளாச்சி மக்கள்..!!

Mon Sep 8 , 2025
கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சிக்கு சொந்தமான மயானத்தில், ஒரே நேரத்தில் 20-க்கும் மேற்பட்ட புதைகுழிகள் முன்கூட்டியே தோண்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது. ஒரே ஒரு இறப்பு மட்டுமே நிகழ்ந்த நிலையில், இவ்வளவு குழிகள் எதற்காக தோண்டப்பட்டன என்பது குறித்து மக்கள் மத்தியில் பீதியும் எழுந்தது. பொதுவாக, ஒருவர் இறந்த பிறகுதான் அவரது உறவினர்களோ அல்லது மயானப் பொறுப்பாளர்களோ குழி தோண்டி அடக்கம் செய்ய ஏற்பாடு செய்வார்கள். […]
Pollachi 2025

You May Like