காஸாவில் தொடரும் மரண ஓலம்..!! அடங்காத வெறியாட்டம்..!! 74 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை..!!

Gasa 2026

பாலஸ்தீனத்தின் காஸா முனையில் இஸ்ரேல் ராணுவம் முன்னெடுத்து வரும் இடைவிடாத வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதல்களில் பலியான அப்பாவி மக்களின் எண்ணிக்கை 74 ஆயிரத்தைத் தாண்டிப் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்முயற்சியில் கடந்த 2025 அக்டோபரில் அறிவிக்கப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை அப்பட்டமாகத் தூக்கி எறிந்துவிட்டு, இஸ்ரேல் தொடர் ராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருவது சர்வதேச அரங்கில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஹமாஸ் ஆயுதக் குழுவினரை வேரறுப்பதாக கூறிக்கொண்டு, பொதுமக்களின் குடியிருப்புகள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் தற்காலிக அகதிகள் முகாம்களைக் குறிவைத்து இஸ்ரேலியப் படைகள் கொடூரத் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி தொடங்கிய இந்த யுத்தத்தில், இஸ்ரேலின் குண்டுவீச்சுகளுக்கு இதுவரை காஸாவில் 74,040 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 1,75,168-க்கும் அதிகமானோர் உடல் உறுப்புகளை இழந்து படுகாயமடைந்துள்ளனர் என்றும் காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சர்வதேச அழுத்தங்களின் காரணமாக 2025 அக்டோபரில் போர்நிறுத்த உடன்பாடு எட்டப்பட்ட போதிலும், கடந்த ஓராண்டு காலத்தில் மட்டும் இஸ்ரேல் நடத்திய திடீர் தாக்குதல்களுக்கு 1,439 அப்பாவி மக்கள் பலியாகியுள்ளனர் என்பது கள நிலவரத்தின் பயங்கரத்தை வெளிப்படுத்துகிறது. காஸாவில் நேற்று முதல் இன்று வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில் மேலும் 8 பேர் கொல்லப்பட்டனர்; 26 பேர் படுகாயமடைந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடரும் இந்தத் தாக்குதல்களால் அங்கு உணவு, குடிநீர் மற்றும் மருந்துப் பொருட்களுக்குக் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டு, ஒட்டுமொத்த காஸாவும் மரண பூமியாக மாறி நிற்கிறது.

Read More : கண் இமைக்கும் நேரத்தில் சரிந்த மண் குவியல்..! கிணறு தோண்டிய 2 இளைஞர்கள் பலி..! ஒருவர் கவலைக்கிடம்..! திருவண்ணாமலையில் சோகம்..!

Next Post

MLA பதவியை ராஜினாமா செய்த இசக்கி சுப்பையா..!! 2ம் இடம் பிடித்தவர் வெற்றியா? இடியை இறக்கிய ஐகோர்ட்..!!

Thu Oct 1 , 2026
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அம்பாசமுத்திரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட இசக்கி சுப்பையா 10 ஆயிரத்து 245 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இதையடுத்து, தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தார். இவரின் வெற்றியை செல்லாது என்று அறிவிக்க கோரி வாக்காளர் காந்திமதிநாதன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கிற்கு பதில் அளிக்க இசக்கி சுப்பையாவுக்கு ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியது. தனக்கு எதிரான […]
Isakki Subbiah 2026

You May Like