“கணவனை தேடும் மனைவி கதை தமிழ்நாட்டுக்கே தெரியும்..” விஜய் சொன்ன குட்டி ஸ்டோரிக்கு உதயநிதி பதிலடி..!

udhayanidhi stalin 3

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு முதல்வர் விஜய் இன்று பதிலுரை ஆற்றினார்.. அப்போது மின் வெட்டு, சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கும் முதல்வர் பதில் வழங்கினார்..


முதல்வர் விஜய் தனது அரசியல் பயணம் குறித்து விரிவாக பேசி தன்னை தேர்ந்தெடுத்து சட்டப்பேரவைக்கு அனுப்பிய மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.. அப்போது டாஸ்மாக்கில் கட்சி நிதி என்று முதல்வர் விஜய் பேசியதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.. அப்போது சபாநாயகர் தலையிட்டு, முதல்வரின் உரை முடிந்த பின்னர் எதிர்க்கட்சி உறுப்பினருக்கு பேச வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறினார்..

விஜய் பேசிக்கொண்டிருக்கும் போதே திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.. அதன்பின்னர் தனது உரையை தொடர்ந்த முதல்வர் விஜய் குட்டிக் கதை சொல்கிறேன் என்று சொன்னார்.. “ வெயிலில் நின்றபடி எதையோ தேடி கொண்டிருந்த ஒரு வயதான நபரிடம் ஒரு சிறுவன் என்ன தேடுகிறீர்கள் என்று கேட்க “ உங்க அப்பா இங்க தான் இருப்பாருன்னு சொன்னாங்க.. அதான் தேடிகிட்டு இருக்கேன்.. எங்க உங்க அப்பாவையே காணோம்..” என்று சொன்னாராம்.. எங்களுக்கும் இதே போல் நக்கல், நையாண்டியாக, சம்மந்தம் சம்மந்தம் இல்லாத குட்டிக்கதை எல்லாம் பேச தெரியும்..” என்று கூறினார்..

முன்னாள் முதல்வர் ஸ்டாலினின் தேர்தல் தோல்வியை மறைமுகமாக குறிப்பிட்டே, முதல்வர் விஜய் நக்கலாக விமர்சித்துள்ளார்..

இந்த நிலையில் முதல்வர் விஜய்யின் இந்த பேச்சுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் scripted அவதூறுகளை அள்ளி வீசி acting performance காட்டி இருக்கிறார் முதலமைச்சர். பேரவையின் live Camera-வை, சினிமா camera என்று நினைத்துக் கொண்டு அவர் பேச, அதனை திர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி single take-இல் shoot செய்ய வேண்டும் என்று பேரவைத்தலைவர் மெனக்கெட்டது ஏற்புடையது அல்ல.

முதலமைச்சரின் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் – பஞ்ச் டயலாக்கும் மட்டும் தான் இருந்ததே தவிர, மின்வெட்டு – விவசாயிகள் பிரச்சினை – மோசமாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு – வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்த பதிலும் இல்லை.

எதிர்க்கட்சிகள் தூண்டுதலில் விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை அவர் கொச்சை செய்ததுக் கண்டிக்கத்தக்கது. குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது.

செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும். ஆகவே, நடிகர் என்பதை மறந்து, இனியாவது முதல்வராக முதலமைச்சர் நடந்து கொள்ள வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்..

RUPA

Next Post

சைபர் மோசடியில் பணத்தை இழந்துவிட்டீர்களா..? RBI முக்கிய தகவல்.. இந்த வழிகளில் பணத்தை திரும்பப் பெறலாம்..!

Tue Jun 23 , 2026
நாட்டில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனுடன் சேர்ந்து, இணையக் குற்றவாளிகள் பல்வேறு வழிகளில் வங்கிக் கணக்குகளிலிருந்து பணத்தைத் திருடுகின்றனர். ஃபிஷிங் (phishing) இணைப்புகள், போலி அழைப்புகள், மால்வேர் (malware) மற்றும் செயலி (app) சார்ந்த மோசடிகள் இதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. ஹேக் செய்யப்பட்ட UPI கணக்குகள் முதல் கார்டு ஸ்கிம்மிங் (card skimming) மற்றும் ரிமோட் அக்சஸ் (remote access) செயலிகள் வரை, மோசடிக்காரர்கள் வங்கிக் கணக்குகளை […]
rbi money loan

You May Like