கார் ஓட்டுனருடன் உண்டான கள்ளக்காதல்! தடையாக இருந்த கணவரை கூலிப்படை வைத்து கொலை செய்த பெண் போலீஸ்!

இப்போதெல்லாம் ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி திருமணத்தை தாண்டிய உறவு என்றால் சர்வ சாதாரணமாகிவிட்டது. அதிலும் திருமணத்தை தாண்டிய உறவில் யாராவது குறுக்கே வந்தால் அவர்களை சர்வ சாதாரணமாக, கொலை செய்துவிட்டு போய்விடுகிறார்கள்.

முன்பெல்லாம் திருமணத்தை தாண்டிய உறவு யாருக்காவது இருந்தால் அந்த உறவு வெளியே எங்கே தெரிந்து விடுமோ என்று ஒரு வித பயத்தில் இருந்தார்கள். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் அப்படி அல்ல திருமணத்தை தாண்டி உறவு யாருக்காவது தெரியவந்தால், அவர்கள் அது தொடர்பாக கேள்வி எழுப்பினால், அவர்களை உடனடியாக கொலை செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவியை சேர்ந்தவர் செந்தில்குமார்(48). இவர் காவல் துறையில் பணியாற்றி வருகிறார். அப்படி பணியாற்றிய இவர் பணி காலத்தின் போது குற்ற செயல்களில் ஈடுபட்டதால் பணி நீக்கம் செய்யப்பட்டார். இவருக்கு சித்ரா(44) என்ற மனைவியும் இருந்துள்ளார். இவர் சிங்காரப்பேட்டை காவல் நிலையத்தில் சிறப்பு துணை ஆய்வாளராக பணியாற்றி வந்திருக்கிறார். இவர்களுக்கு ஜெகதீஷ் குமார்(19) என்ற மகனும் இருந்திருக்கிறார். இவர்கள் 3 பேரும் ஊத்தங்கரை கவர்னர் தோப்பு பகுதியில் வசித்து இருந்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் தான் செந்தில்குமார் கடந்த செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி திடீரென்று காணாமல் போனார். இது குறித்து செந்தில்குமார் தாயார் அருகில் இருந்த காலநிலையத்தில் புகார் வழங்கினார். புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கு நடுவே காணாமல் போன செந்தில்குமாரின் கைபேசி மற்றும் அவருடைய மகனின் கைபேசி, அவர்களுடைய கார் ஓட்டுநர் கமல்ராஜ்(37). கைபேசி, உள்ளிட்டவை சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவர்களை கடந்த 13ஆம் தேதி விசாரணைக்காக அழைத்தனர்.

இந்த நிலையில், அவர்கள் யாரும் காவல் நிலையத்தில் ஆஜராகாமல் கடந்த 14ஆம் தேதி கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அப்போது அவர்கள் செந்தில்குமாரை கொலை செய்து தென்பெண்ணை ஆற்றில் உடலை வீசிவிட்டதாக காவல்துறையினரிடம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இது குறித்து செந்தில்குமாரின் மனைவி சித்ராவிடம் ஊத்தங்கரை துணை காவல்துறை கண்காணிப்பாளர் அமலா அட்மின் விசாரணை செய்தார். அதோடு சேலம் சிறையில் இருந்து ஜெகதீஷ்குமார், கார் ஓட்டுநர் கமல்ராஜ் உள்ளிட்ட இருவரையும் காவல்துறையினர் சேலம் சிறையில் இருந்து காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சித்ராவின் கணவர் செந்தில்குமார் அடிக்கடி குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததாகவும், ஆகவே தலைமை காவலராக இருந்த அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டார். எனவே அவர் கடந்த 2008 ஆம் ஆண்டு ஒரு காரை வாங்கி அதை வாடகைக்கு ஓட்டி வந்தார். மேலும், அவர் பணியாற்றிய காலத்தில் சித்ராவும் ,அவரும் சேர்ந்து ஒரு வீட்டை வாங்கி உள்ளனர் என்றும் காவல்துறையினருக்கு தெரியவந்தது.

அத்துடன் சித்ரா மேலும் வழங்கிய வாக்குமூலத்தில் தன்னுடைய கணவர் வீட்டில் இல்லாத சமயங்களில் கமல்ராஜ் தங்களுடைய வீட்டிற்கு வருவார் எனவும், நாங்கள் அவ்வப்போது உல்லாசமாக இருந்து வந்தோம் எனவும், இதனைத் தொடர்ந்து கமல்ராஜ் அடிக்கடி என்னுடைய வீட்டிற்கு வந்து சென்றது என்னுடைய கணவருக்கு தெரிய வந்தது, எங்களை கண்டித்தார். ஒருநாள் என்னுடைய கணவர் செந்தில்குமார் வீட்டுக்கு வந்தபோது கமல்ராஜ் உடன் நான் தனிமையில் இருந்தேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதோடு இவை பார்த்து ஆத்திரம் கொண்ட என்னுடைய கணவர் வீட்டில் இருந்த பொருட்களை உடைத்தெறிந்தார் என்றும் சித்ரா தெரிவித்திருக்கிறார். அதன் பின்னர் அவருக்கும், கமல்ராஜுக்கும் பிரச்சனை உண்டானது. இது குறித்து கமல்ராஜ் வழங்கிய புகாரில் என்னுடைய கணவர் கைது செய்யப்பட்டார் எனவும் அதன் பின்னர் ஜாமினில் வெளியே வந்தார் என்றும், மேலும் அவர் வீட்டிற்கு எப்போதாவது வந்து செல்வார் என குறிப்பிட்டுள்ளார் சித்ரா.

அதோடு, தனக்கு தொடர்ச்சியாக பிரச்சனைகள் வந்ததால் பாதகல்லை சேர்ந்த பெண் சாமியார் சரோஜாவை சந்தித்தேன். என்னுடைய பிரச்சனைகளை கேட்ட அவர் என்னிடம் கூலிப்படை இருக்கிறது, 10 லட்சம் ரூபாய் வழங்கினால் உனக்கு இடையூறாக இருக்கும் கணவரை கொலை செய்து விடலாம், யாருக்கும் தெரியாமல் கதையை முடித்து விடுவோம் என்று திட்டம் வகுத்துக் கொடுத்தார் என்று கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து சித்ரா 9 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் தயார் செய்து பெண் சாமியார் சரோஜாவிடம் வழங்கியுள்ளார். அந்த பணத்தை கூலிப்படையின் தலைவரிடம் அவரை முடித்து விடுங்கள். இதில் நான் சம்பந்தப்பட்டது யாருக்கும் தெரிய கூடாது என்று சித்ரா அவரிடம் தெரிவித்துள்ளார்.ஆகவே அவரை கொலை செய்து செந்தில்குமாரின் மகன் ஜெகதீஷ்குமார் மூலமாக வீட்டுக்கு கிணற்றில் வீசி இருக்கிறார்கள்.

ஆகவே காவல்துறையினர் செந்தில்குமார் காணாமல் போன வழக்கை தீவிரமாக விசாரித்து வந்திருக்கிறார்கள். இந்த விசாரணை தீவிரம் அடைந்ததால் சித்ராவின் மீது சந்தேகம் வராமல் இருப்பதற்காக அவருடைய கள்ளக்காதலன் கமல்ராஜ் மற்றும் அவருடைய மகன் உள்ளிட்டோரை நீதிமன்றத்தில் சரணடையச் சொல்லி இருக்கிறார் சித்ரா. அதன் அடிப்படையில் அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் சரணடைந்திருக்கிறார்கள்.

ஆனால் இந்த வழக்கில் காவல்துறையினர் அவர்கள் 3 பேரின் செல்போன் உரையாடல்கள் அவர்கள் மூவரும் யாருடன் பேசி இருக்கிறார்கள் என்பதை ஆராய்ந்து முதலில் பெண் சாமியார் சரோஜாவை கைது செய்து இருக்கிறார்கள். அவர் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் காவல்துறையினரிடம் அதன் அடிப்படையில் இந்த மூவரும் காவல்துறையிடம் சிக்கிக் கொண்டனர் என்பது காவல்துறையினரின் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

Next Post

மகாகவி பாரதியாரின் பேத்தி லதா பாரதி மறைவு..!! முதலமைச்சர் முக.ஸ்டாலின் இரங்கல்..!!

Mon Dec 26 , 2022
இசையாசிரியரும் மகாகவி பாரதியாரின் மகள் வழிப் பேத்தியுமான லலிதா பாரதி அம்மையாரின் மறைவுக்கு முதலமைச்சர் முக.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்திய நாட்டின் விடுதலைக்காக தன்னுடைய பாடல்களாலும், கவிதைகளாலும் போராடியவர் மகாகவி பாரதியார். 1882இல் எட்டயபுரத்தில் பிறந்த இவர், தமிழ், தமிழர் நலன், சாதிய மறுப்பு, பெண் விடுதலை, இந்திய விடுதலை உள்ளிட்ட பலவற்றிற்காக குரல் கொடுத்தவர். மகாகவி பாரதியாரின் மகள்வழிப் பேத்தியும், இசையாசிரியருமான லலிதா பாரதி அம்மையார், வயது மூப்பு […]
மகாகவி பாரதியாரின் பேத்தி லதா பாரதி மறைவு..!! முதலமைச்சர் முக.ஸ்டாலின் இரங்கல்..!!

You May Like