Breaking: பல தாக்குதல்களின் ‘மாஸ்டர் மைண்ட்’ தீவிரவாதி அதிரடி கைது.! இந்தியாவில் சதி செயல்களுக்கு திட்டமா.?

இந்திய ராணுவம் மற்றும் காவல் துறையால் தேடப்பட்டு வந்த முக்கிய தீவிரவாதி காவல்துறையால் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ராமர் கோவில் திறப்பு விழா மற்றும் குடியரசு தின விழா அணிவகுப்பு நடைபெற இருக்கும் நிலையில் அந்த நபர் டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பல தீவிரவாத தாக்குதல்களில் தொடர்புடைய ஸ்கூல் முஜாஹிதீன் தீவிரவாதி ஜாவித் அகமது மட்டு. இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் காவல்துறை மற்றும் ராணுவம் தீவிரமாக தேடி வந்தது. இந்த சூழ்நிலையில் தீவிரவாதி ஜாவித் அகமத் டெல்லி சிறப்பு பிரிவு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவரிடமிருந்து பயங்கர ஆயுதங்கள் மற்றும் கார் ஒன்றும் கைப்பற்றப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

உத்திரபிரதேசத்தில் வருகின்ற 22 ஆம் தேதி ராமர் கோயில் திறப்பு விழா நடைபெற இருக்கிறது. மேலும் தலைநகர் டெல்லியில் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தின விழா அணிவகுப்பு நடைபெற இருக்கிறது. அவற்றை சீர்குலைக்கும் திட்டங்கள் எதுவும் தீவிரவாதிகளிடம் இருக்கிறதா என காவல்துறை தீவிரமாக விசாரித்து வருகிறது. இவரது கைதியின் மூலம் பல சதித்திட்டங்கள் முறியடிக்கப்பட்டு இருக்கலாம் எனவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த தீவிரவாதி கைது செய்யப்பட்டிருப்பது காவல்துறைக்கு சற்று நிம்மதியை கொடுத்துள்ளது.

Next Post

"ஒத்த லைக் தான்.., 20 லட்சம் ஸ்வாஹா."! சாப்ட்வேர் இன்ஜினீருக்கே விபூதி அடித்த கும்பல்.! பரபரப்பு சம்பவம்.!

Thu Jan 4 , 2024
ஆன்லைன் மூலமாக பண மோசடி செய்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மக்களை விதவிதமாக புதுவித யோசனையுடன் மோசடிக்காரர்கள் தினம் தினம் ஏமாற்றி வருகின்றனர். கடந்த ஆண்டு பல்வேறு மோசடிகளை நாம் கேள்விப்பட்ட நிலையில் 2024 ஆம் ஆண்டின் முதல் மோசடி தற்போது நடைபெற்று இருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியரான அவிநாசி என்பவர் புனே நகரில் தனது வீட்டிலிருந்து வேலை செய்து வந்திருக்கிறார். வொர்க் ப்ரம் ஹோம் முறையில் […]

You May Like