கர்நாடகத்தில் ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ்……! காலை தொட்டு வணங்குகிறேன் டி.கே.சிவக்குமார் உருக்கம்……!

கர்நாடக சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் ஆட்சி அமைக்க 113 தொகுதிகள் தேவை என்ற நிலையில், காங்கிரஸ் கட்சி 132 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது பாஜக 64 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. கனகபுரம் தொகுதியில் போட்டியிட்ட கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் டி கே சிவகுமார் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் அசோக் டெபாசிட் இழந்தார்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது. ஆகவே அந்த கட்சியின் தொண்டர்கள் உற்சாகத்துடன் இருக்கிறார்கள் தற்சமயம் கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கக்கூடிய சூழல் ஏற்பட்டு இருக்கிறது.

இப்படியான சூழ்நிலையில், பத்திரிக்கையாளர்களை சந்தித்த கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முதலமைச்சர் வேட்பாளர் போட்டியில் இருப்பவருமான டி.கே சிவக்குமார் வெற்றியை வழங்கிய பொதுமக்களின் காலை தொட்டு வணங்குகிறேன் என்று கண்ணீர் மல்க தெரிவித்திருக்கிறார்.

Next Post

கர்நாடகத்தில் அன்பு வெற்றி பெற்றுள்ளது……! வெறுப்பு அரசியல் படுதோல்வி அடைந்திருக்கிறது காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி பேச்சு…..!

Sat May 13 , 2023
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒட்டுமொத்தமாக இருக்கின்ற 224 தொகுதிகளில் ஆட்சி அமைக்க 113 தொகுதிகள் தேவை என்ற நிலையில் காங்கிரஸ் கட்சியின் 136 தொகுதிகளில் முன்னிலை பெற்று இருக்கிறது. ஆளுங்கட்சியான பாஜக 63 தொகுதிகளில் மட்டும் தான் முன்னிலையில் இருக்கிறது. மதச்சார்பற்ற ஜனதா தளம் 21 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான […]

You May Like