வெள்ளை கோட் சூட்.. முதல் ஆளாக வாக்களித்தார் நடிகர் அஜித்..!

ajith 1

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த முறை திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தவெக ஆகிய நான்கு முக்கிய அரசியல் கட்சிகள் நேருக்கு நேர் மோதுவைத்தால் பெரும் எதிர்பார்ப்பு மக்களிடையே கிளம்பியுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில், 4023 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதில் 3579 பேர் ஆண்கள், 443 பேர் பெண்கள், ஒருவர் மூன்றாம் பாலினத்தவர்.


இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி கண்காணிப்பு ஏற்பாடு செய்யப்பட்டு, கட்டுப்பாட்டு அறைகள் மூலம் நேரடியாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. வாக்குப்பதிவு முடிந்ததும், இயந்திரங்கள் பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்படும். மே 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்.

இதற்கிடையையே தமிழ்நாடு முழுவதும் மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்குகள் சரியாக பதிவாகிறதா என பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த நிலையில்தான் நடிகர் அஜித் குமார் திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்தார்.

வாக்குப்பதிவு தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பே வெள்ளைநிற கோட் அணிந்து அஜித் வாக்குச்சாவடிக்கு வந்தார். அவரைப் பார்க்க ரசிகர்கள் கூடியிருந்ததால் கூட்ட நெரிசலுக்கு மத்தியில் அவரை காவலர்கள் வாக்குச்சாவடிக்குள் அழைத்துச் சென்றனர். முதல் ஆளாக தனது வாக்கை பதிவு செய்த அஜித் வீடு திரும்பினார். இதேபோல் நடிகர் சுந்தர்.சி மற்றும் குஷ்பூ ஆகியோரும் மந்தைவெளி வாக்குச்சாவடியில் முதல் ஆளாக வரிசையில் நின்று வாக்களித்தனர். 

Read more: 5 வாக்காளர்களுக்கு தனி வாக்குச்சாவடி…! தமிழக சட்டமன்ற தேர்தல் ருசீகரம்…

English Summary

Actor Ajith was the first to vote in the white coat suit..!

Next Post

IPL 2026: CSK ரசிகர்களே.. மும்பைக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் தோனி..? வைரலாகும் வீடியோ..

Thu Apr 23 , 2026
Viral VIDEO Shows MS Dhoni 'Sharpening' Bat Ahead Of Mumbai Indians Vs Chennai Super Kings Clash
doni

You May Like