மீண்டும் பணிக்கு திரும்ப டுவிட்டர் திடீர் உத்தரவு!!

பிரபலமான டுவிட்டர் நிறுவனத்தை எலன்மாஸ்க் வாங்கியதும் அதில் இருந்து 3,700 பணியாளர்கள் நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் தவறாக முடவு செய்யப்பட்டு பணி நீக்கம் நடந்துள்ளது என குறிப்பிட்டு மீண்டும் பணிக்கு திரும்ப ஏராளமான பணியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை சுமார் 3700 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டார். 3 மாத ஊதியம் வழங்கப்படும் என்று கூறி பணி நீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதில் சிலர் தவறுதலாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக டுவிட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சிலர் நன்கு அனுபவம் வாய்ந்தவர்கள் அவர்கள் சிறந்த பணியாளர்கள். அவர்கள் இங்கு பணியாற்ற வேண்டியது மிக அவசியம் என்பதை டுவிட்டர் நிறுவனம் அறிந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டுவிட்டரை வாங்கியதும் எலன் மஸ்க் குறிப்பிட்ட பணியாளர்கள் என்ன வேலை செய்கின்றார்கள். அவர்களின் அனுபவம் என்ன என்பதை பற்றி எல்லாம் முன்பு யோசிக்கவில்லை . பணி நீக்கம் செய்யப்பட்டவுடன் என்ன மாயம் நடந்தது என தெரியவில்லை. இந்நிலையில் இன்று நூற்றுக்கணக்கானோருக்கு பணி ஆணை கூழங்கப்பட்டுள்ளது.

செலவைக் குறைக்கும் விதமாக முதலில் பணி நீக்கம் செய்ப்பட்டதாக எலன்மஸ்க் தெரிவித்திருந்தார். பல ஊழியர்கள் இதனால் வேலை இழந்தனர். அடத்ததாக எங்கு செல்லலாம் என குழப்பத்தில் இருந்தனர். மேலும் மத்திய தொழில்நுட்ப அமைச்சர்கள் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர் பணி நீக்கம் செய்யப்படும் முன்பு அவர்களிடம் முன்னறிவிப்பு கொடுத்திருக்க வேண்டும். அவர்களுக்கு நேரம் ஒதுக்கியிருக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதையடுத்தே இந்த உத்தரவு வந்துள்ளதாகவும் ஒரு தகவல் வருகின்றது.

Next Post

ரன்பீர்-ஆலியா குழந்தை குறைபிரசவமா?

Mon Nov 7 , 2022
ரன்பீர்-ஆலியாபட் தம்பதியினருக்கு நேற்று குழந்தை பிறந்த நிலையில் குறை பிரசவத்தில் குழந்தை பிறந்ததாக வதந்திகள் மீண்டும் கிளம்பியுள்ளது. ஏப்ரல் மாதத்தில் ரன்பீர் கபூர்-ஆலியாபட் தம்பதியினருக்கு திருமணம் நடைபெற்றது. இதையடுத்து அவர்கள் 2 மாதத்தில் தங்களுக்கு விரைவில் வாரிசு வரப்போவதாக மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்தனர். இந்நிலையில் திருமணமாகி 7 மாத்திலேயே குழந்தை பிறந்துள்ளது. இதனால் வழக்கம் போல நெட்டிசன்கள் வதந்தியை கிளப்பியுள்ளனர். ஒருபுறம் அவர்களுக்கு குறை பிரசவம் நடந்துள்ளதாகவும் பேச்சு அடிபடுகின்றது. […]

You May Like